
"All Eyes on Rafah" என்ற புகைப்படத்திற்கு எதிராக இஸ்ரேலின் "Where were your eyes on..."
செய்தி முன்னோட்டம்
கடந்த சில நாட்களாக இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வரும்,"All Eyes on Rafah" என்ற புகைப்படத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. X தளத்தில் வெளியான இந்த புகைப்படத்தில்,"Where were your eyes on October 7" என குறிப்பிட்டு, ஒரு ஹமாஸ் போராளி ஒரு குழந்தையின் முன் துப்பாக்கியுடன் நிற்கும் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. தெற்கு காசா நகரத்தில் தஞ்சம் அடைந்திருந்த பாலஸ்தீனியர்கள் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை எதிர்த்து, பல லட்சம் பேர் சமூக வளைத்தளங்களில் ''All Eyes on Rafah'' என்ற புகைப்படத்தை பதிவிட்டிருந்தனர். இதற்கு இஸ்ரேல் பதிலளித்துள்ளது. அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸின் திடீர் தாக்குதலில் கிட்டத்தட்ட 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
ட்விட்டர் அஞ்சல்
இஸ்ரேல் பதில்!
We will NEVER stop talking about October 7th.
— Israel ישראל (@Israel) May 29, 2024
We will NEVER stop fighting for the hostages. pic.twitter.com/XoFqAf1IjM