30 பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுவித்ததை அடுத்து 12 பிணயக்கைதிகளை விடுவித்தது ஹமாஸ்
செய்தி முன்னோட்டம்
ஏழு வார இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிரந்தரமாக நிறுத்துவதற்கு மத்திய கிழக்கு நாடுகள் முயற்சித்து வரும் நிலையில், மேலும் 12 பிணயக்கைதிகளை செவ்வாயன்று காசா சிறையிலிருந்து ஹமாஸ் விடுவித்தது.
30 பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுவித்ததை அடுத்து, ஹமாஸ் மேலும் 12 பிணயக்கைதிகளை விடுவித்துள்ளது.
இந்த முறை விடுவிக்கப்பட்ட பிணயக்கைதிகளில் பத்து இஸ்ரேலியர்களும் இரண்டு தாய்லாந்து நாட்டுக்காரர்களும் இருந்தனர் என்று இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், இஸ்ரேல் எல்லைக்குள் நுழைந்த அந்த 12 பிணயக்கைதிகளும் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் 30 பாலஸ்தீனிய கைதிகள் விடுவிக்கப்பட்டதாக இஸ்ரேல் சிறைத்துறை தெரிவித்திருந்தது.
ட்ஜகிவ்க்
போர் நிறுத்த அறிகுறிகளுக்கு சர்வசே நாடுகள் வரவேற்பு
முகமூடி அணிந்து கொண்டு ஆயுதம் ஏந்திய சிலர், 12 பிணயக்கைதிகளை ரஃபா எல்லையில் வைத்து செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்ததை AFP பத்திரிகையாளர் நேரில் பார்த்திருக்கின்றனர்.
7 வாரங்களாக தொடர்ந்து நடந்து வந்த இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது இடை நிறுத்தப்பட்டிருப்பதற்கு, பல சர்வதேச நாடுகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
ஹமாஸ் குழு, இஸ்ரேல் பிணையக்கைதிகளை விடுவிக்க ஒப்பு கொண்டதை அடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை முதல் இஸ்ரேல்-ஹமாஸ் போர் 4 நாட்களுக்கு இடை நிறுத்தப்பட்டது.அந்த 4 நாட்கள் இடை நிறுத்தம் இந்த செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைய இருந்த நிலையில், தொடர்ந்து பிணயக்கைதிகளை திரும்ப பெறும் நோக்கில், நேற்று இஸ்ரேல் மேலும் 48 மணி நேரத்திற்கு போர்நிறுத்ததை நீட்டித்தது.