டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் 14 ஆண்டுகால சாதனையை முறியடிப்பாரா யஷஸ்வி ஜெய்ஸ்வால்
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடி வருகிறார்.
அவர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு இரட்டை சதங்களை அடித்தார்.
சமீபத்தில் முடிவடைந்த வங்கதேசத்திற்கு எதிரான தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்தார்.
ஒட்டுமொத்தமாக, இடது கை தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்த ஆண்டு இதுவரை விளையாடியுள்ள 8 டெஸ்டில் (15 இன்னிங்ஸ்) 66.35 சராசரியில் இரண்டு சதங்கள் (இரண்டும் இரட்டை சதம்) மற்றும் ஆறு அரைசதங்களுடன் 929 ரன்கள் குவித்துள்ளார்.
ஜெய்ஸ்வால் 2024ஆம் ஆண்டில் டெஸ்டில் 1000 ரன்களைக் கடப்பார் என்பது உறுதியான நிலையில், அவர், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சாதனை
சச்சின் டெண்டுல்கரின் சாதனை
சச்சின் டெண்டுல்கர் இந்திய கிரிக்கெட் அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் ஆண்டில் அதிக ரன் குவித்தவராக உள்ளார்.
அவர் 2010இல் 14 டெஸ்ட் போட்டிகளில் (23 இன்னிங்ஸ்) விளையாடி 78.10 என்ற சராசரியை ஏழு சதங்கள் மற்றும் ஐந்து அரைசதங்களுடன் 1,562 ரன்கள் குவித்துள்ளார்.
இவருக்கு அடுத்தபடியாக வீரேந்திர சேவாக் 2008இல் 1,462 ரன்களும், 2010இல் 1,422 ரன்களையும் எடுத்து இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களை தன்வசம் வைத்துள்ளார்.
தற்போது 929 ரன்களுடன் உள்ள யஷஸ்வி ஜெய்ஸ்வால், இந்த ஆண்டில் இன்னும் ஏழு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளார்.
இந்நிலையில், தற்போதைய தனது சிறந்த ஆட்டத்தைத் தொடர்ந்தால், 14 ஆண்டுகால சச்சின் டெண்டுகரின் சாதனையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் முறியடிப்பார்.