
INDvsWI 2வது டெஸ்ட் : ஷிகர் தவானின் சாதனையை பின்னுக்குத் தள்ளிய யஷஸ்வி ஜெய்ஸ்வால்
செய்தி முன்னோட்டம்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் (ஜூலை 21), இந்திய கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் செய்து ஆட்டநேர முடிவில், 4 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்களுடன் களத்தில் உள்ளது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் ஷர்மா அரைசதமடித்து அவுட்டாகிய நிலையில், விராட் கோலி 87 ரன்களுடன் சதத்தை நெருங்கும் நிலையில் களத்தில் உள்ளார்.
தனது முதல் டெஸ்ட் போட்டியில் சதமடித்த யஷஸ்வி, இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் 57 ரன்களில் அவுட்டானாலும், இந்திய வீரர்களில் புதிய சாதனை படைத்துள்ளார்.
jaiswal 3rd highest run scorer in first 2 test innings
மூன்றாவது அதிக ரன் எடுத்த இந்திய வீரர்
யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் டெஸ்டில் 171 ரன்கள் எடுத்தார். அதைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 57 ரன்கள் எடுத்தார்.
இதுவரை தனது முதல் இரண்டு டெஸ்ட் இன்னிங்ஸ்களில் மொத்தம் 228 ரன்கள் எடுத்த ஜெய்ஸ்வால், டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இரண்டு டெஸ்ட் இன்னிங்ஸ்களில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் ஷிகர் தவானை பின்னுக்குத் தள்ளி, மூன்றாவது இடம் பிடித்துள்ளார்.
தவான் தனது முதல் இரண்டு இன்னிங்ஸிலும் 210 ரன்கள் எடுத்தார். இந்த பட்டியலில், ரோஹித் சர்மா தனது முதல் இரண்டு இன்னிங்ஸ்களில் 288 ரன்கள் குவித்து பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
சவுரவ் கங்குலி தனது முதல் இரண்டு இன்னிங்ஸ்களில் 267 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.