இரானி கோப்பையில் இரட்டை சதம் மற்றும் சதமடித்த முதல் வீரர் : யஜஸ்வி ஜெய்ஸ்வால் சாதனை
யஷஸ்வி ஜெய்ஸ்வால் சனிக்கிழமை (மார்ச் 4) குவாலியரில் மத்தியப் பிரதேசத்திற்கு எதிரான இரானி கோப்பை அறிமுக போட்டியில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்காக இரண்டாவது சதம் அடித்தார். மும்பையை சேர்ந்த யஷஸ்வி முதல் இன்னிங்ஸில் இரட்டை சதம் (259 பந்துகளில் 213 ரன்கள்) அடித்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் சதம் (157 பந்துகளில் 144 ரன்கள்) விளாசினார். இதன் மூலம் ஒரு இரானி கோப்பை போட்டியில் இரட்டை சதம் மற்றும் சதத்தை பதிவு செய்த முதல் பேட்டர் என்ற சாதனையை யஜஸ்வி படைத்தார். மேலும், ஜெய்ஸ்வால் 2012-13 பதிப்பில் எடுத்த 332 ரன்களை எடுத்த ஷிகர் தவானின் சாதனையை முறியடித்ததன் மூலம், ஒரு இரானி கோப்பைப் பதிப்பில் அதிக ரன்கள் எடுத்தவர் ஆனார்.
முதல் தர போட்டிகளில் யஜஸ்வி ஜெய்ஸ்வால் சாதனை
இதற்கிடையே முதல் இன்னிங்ஸின் போது யஜஸ்வி இரானி கோப்பையில் இரட்டை சதம் அடித்த 10வது பேட்டர் ஆனார். ஜெய்ஸ்வால் 2022-23 சீசனின் தொடக்கத்தில் இருந்து ரெட் பால் கிரிக்கெட்டில் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார். மேலும் அவர் சென்னையில் தனது துலீப் டிராபி அறிமுகத்தில் வடகிழக்கு மண்டலத்திற்கு எதிராக மேற்கு மண்டலத்திற்காக இரட்டை சதம் (227) அடித்தார். பின்னர் நவம்பர் 2022 இல் காக்ஸ் பஜாரில் பங்களாதேஷுக்கு எதிராக இந்தியா ஏ அணிக்காக விளையாடிய அறிமுக போட்டியிலும் சதம் (146) அடித்தார். மேலும், துலீப் டிராபி இறுதிப் போட்டியின் போது, ஜெய்ஸ்வால் முதல் தர கிரிக்கெட்டில் 1000 ரன்களை எட்டிய வேகமான இந்தியர் ஆனார்.