WTC Final 2023 : ஓவல் மைதானத்தின் இந்தியா, ஆஸ்திரேலியாவின் முந்தைய புள்ளிவிபரங்கள்!
ஓவலில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 இன் இறுதிப் போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் மோத உள்ளன. போட்டி நடக்கும் ஓவல் மைதானத்தில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இதற்கு முன்பு எவ்வாறு செயல்பட்டன என்பதை பார்க்கலாம். இந்திய அணி 1936 ஆம் ஆண்டு ஓவல் மைதானத்தில் தனது முதல் போட்டியை விளையாடினாலும், அங்கு தனது முதல் வெற்றியைப் பெற 35 ஆண்டுகள் ஆனது. மொத்தமாக இந்தியா ஓவலில் 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2 ஆட்டங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதே சமயம் 5ல் தோல்வியை சந்தித்த நிலையில் 7 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் 140 வருட மோசமான சாதனை
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை பொறுத்தவரை, அவர்கள் 1880 முதல் இந்த மைதானத்தில் விளையாடி வருகின்றனர். மேலும் 140 ஆண்டுகளில் 7 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. ஆஸ்திரேலியா 38 போட்டிகளில் விளையாடி 7ல் வெற்றி பெற்று 17ல் தோல்வியடைந்தது. 14 போட்டிகள் டிராவில் முடிந்தன. மேலும் இந்தியா ஓவல் மைதானத்தில் கடைசி ஐந்து போட்டிகளைப் பார்க்கும்போது, இந்தியா ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது. மூன்று ஆட்டங்களில் தோல்வியடைந்தது, ஒரு போட்டியை டிராவில் முடித்துள்ளது. ஆஸ்திரேலியாவும் முந்தைய ஐந்து ஆட்டங்களில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது.