Page Loader
மகளிர் ஐபிஎல் 2023 : பெண் ரசிகைகளுக்கு இலவச டிக்கெட்
மகளிர் ஐபிஎல் 2023 போட்டிகளை பார்க்க பெண் ரசிகைகளுக்கு இலவச டிக்கெட்

மகளிர் ஐபிஎல் 2023 : பெண் ரசிகைகளுக்கு இலவச டிக்கெட்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 01, 2023
04:31 pm

செய்தி முன்னோட்டம்

மகளிர் ஐபிஎல் 2023 மார்ச் 4 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், டிக்கெட் விற்பனை புதன்கிழமை (மார்ச் 1) தொடங்கியுள்ளது. ஆண் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ரூ.100 மற்றும் ரூ.400 என இரண்டு விலைகளில் டிக்கெட் விற்கப்படும் நிலையில், சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு இந்த சீசன் முழுவதும் இலவசமாக டிக்கெட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் புக் மை ஷோ தளம் மூலம் டிக்கெட்டுகளை ஆன்லைனில் வாங்கிக்கொள்ளலாம் என மகளிர் ஐபிஎல் நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும் மார்ச் 4ஆம் தேதி 5.30 மணிக்கு தொடக்க விழா நடக்க உள்ளது. இதில் பாலிவுட் நட்சத்திரங்கள் க்ரீத்தி சனோன், ஏபி தில்லான் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

மகளிர் ஐபிஎல் ட்வீட்