Page Loader
AFG vs NZ: ஆப்கானிஸ்தானுக்கு 289 என இலக்கு நிர்ணயித்துள்ளது நியூஸிலாந்து 
ஒரு நாள் உலகக் கோப்பை AFG vs NZ: இன்னிங்ஸ் பிரேக்

AFG vs NZ: ஆப்கானிஸ்தானுக்கு 289 என இலக்கு நிர்ணயித்துள்ளது நியூஸிலாந்து 

எழுதியவர் Venkatalakshmi V
Oct 18, 2023
06:15 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் நடைபெற்று வரும் 13 வது உலக கோப்பை தொடரில், இன்றைய போட்டியில் நியூசிலாந்தும் ஆப்கானிஸ்தான் அணியும் மோதின. சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி, 50 ஓவர் இறுதியில் 6 விக்கெட் இழப்பிற்கு, 289 ரன்கள் பெற்றது. ஆட்டத்தின் இறுதியில், நியூஸிலாந்து அணியில், மார்க் சாப்மேன் மற்றும் மிட்செல் சான்டனர் ஆகியோர் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில், நியூசிலாந்து அணி முறையே இங்கிலாந்து, நெதர்லாந்து மற்றும் வங்கதேசம் என அடுத்தடுத்து போட்டிகளில் வென்று வலுவாக உள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

AFG vs NZ: இன்னிங்ஸ் பிரேக்