
பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய மகளிர் அணியின் பிரமாண்ட வெற்றி! சச்சின், கோலி பாராட்டு!
செய்தி முன்னோட்டம்
மகளிர் டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி உட்பட பல முக்கிய நபர்கள், ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 12) இந்தியா பெற்ற வெற்றிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
தனது குடும்பத்துடன் ஆட்டத்தை கண்டுகளித்த சச்சின், தனிப்பட்ட முறையில் ஷஃபாலி, ஜெமிமா மற்றும் ரிச்சாவின் ஆட்டத்தை வெகுவாக பாராட்டினார்.
இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி, பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய இந்திய மகளிர் ஆட்டம் தன்னை பிரமிக்க வைத்ததாக தெரிவித்துள்ளார். மேலும் இந்திய ஆடவர் கிரிக்கெட்டை சேர்ந்த பல்வேறு நபர்களும், மகளிர் அணிக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
சச்சின் பாராட்டு
Watched the game with Anjali Arjun and we thoroughly enjoyed cheering for our Indian Women’s team.
— Sachin Tendulkar (@sachin_rt) February 12, 2023
A good start by Shafali, Jemimah paced her innings beautifully along with a good burst from Richa towards the end.
Wonderful to see India win AGAIN! 🇮🇳🏏💙#INDvsPAK pic.twitter.com/ruF3LKrXAw
இந்திய மகளிர் அணி
இந்தியா vs பாகிஸ்தான் போட்டியின் புள்ளி விபரங்கள்
பாகிஸ்தான் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும், பாகிஸ்தானின் கேப்டன் பிஸ்மா மரூப் (68*) மற்றும் ஆயிஷா நசீம் (43*) கடைசி வரை ஆட்டமிழக்காமல் 149 ரன்கள் என்ற ஒரு வலுவான ஸ்கோரை எட்டினர்.
இந்தியாவின் யாஸ்திகா பாட்டியா (17), ஷபாலி வர்மா (33) சிறப்பான தொடக்கம் அமைத்த நிலையில், ஜெமிமா ரோட்ரிகஸ் (53), விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிச்சா கோஷ் (31) கடைசி வரை நின்று இந்தியாவுக்கு வெற்றியை தேடித் தந்தனர்.
மேலும் இந்த வெற்றியின் மூலம் டி20 உலகக்கோப்பையில் இந்திய மகளிர் அணியின் மிகப்பெரிய ரன் சேஸ் என்ற சாதனையையும் இந்திய அணி படைத்துள்ளது.