INDvsWI டி20 : கடைசி போட்டியில் களமிறங்க தயாராகும் அணிகள்; தொடரை வெல்லப்போவது யார்?
செய்தி முன்னோட்டம்
ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 13) புளோரிடாவில் நடக்க உள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியுடனான ஐந்தாவது டி20 கிரிக்கெட் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றும் நம்பிக்கையுடன் இந்திய அணி உள்ளது.
வெஸ்ட் இண்டீஸ்-இந்தியா டி20 தொடரில் 5 போட்டிகள் இடம் பெற்றுள்ள நிலையில், முதல் மூன்று போட்டிகள் வெஸ்ட் இண்டீஸிலும், கடைசி இரண்டு போட்டிகள் அமெரிக்காவின் புளோரிடாவிலும் நடத்த திட்டமிடப்பட்டன.
இதன்படி வெஸ்ட் இண்டீஸில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி தொடங்கிய தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று முன்னிலை பெற்றது.
எனினும், அதன்பின் சுதாரித்துக் கொண்ட இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் நடந்த மூன்றாவது போட்டி மற்றும் புளோரிடாவில் நடந்த நான்காவது போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
will india win west indies t20 series
தொடரை வெல்லுமா இந்திய அணி?
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணி, முதல் இரண்டு போட்டிகளில் சொதப்பினாலும், அதன் பின்னர் சுதாரித்துக் கொண்டது.
குறிப்பாக, நான்காவது டி20 போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரு முனைகளிலும் ஒருங்கிணைந்து சிறப்பாக செயல்பட்டதால் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தொடரை யார் வெல்வது என்பதை தீர்மானிக்கும் கடைசி போட்டி ஞாயிற்றுக்கிழமை நடக்க உள்ள நிலையில், இந்திய அணிய இதே செயல்திறனுடன் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், ரோவ்மேன் பவல் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் மீண்டும் எழுச்சி பெற்று இந்தியாவுக்கு கடும் போட்டியைக் கொடுத்து வீழ்த்தும் முனைப்பில் உள்ளது.