Loading...
250 ரன் டார்கெட்டா? அசால்ட்டா அடிச்ச வெஸ்ட் இண்டீஸ்! சர்வதேச கிரிக்கெட்டில் புதிய சாதனை
250 ரன்கள் இலக்கை எட்டி இந்திய அணியை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்

250 ரன் டார்கெட்டா? அசால்ட்டா அடிச்ச வெஸ்ட் இண்டீஸ்! சர்வதேச கிரிக்கெட்டில் புதிய சாதனை

எழுதியவர் Sekar Chinnappan
Oct 10, 2026
07:41 am

செய்தி முன்னோட்டம்

ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்கேஏ சர்வதேச மைதானத்தில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 9) நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில், 250 ரன்கள் என்ற இமாலய இலக்கை வெற்றிகரமாக விரட்டிப்பிடித்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட இரண்டாவது மிகப்பெரிய ரன் சேஸ் இதுவாகும். இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது சமன் செய்துள்ளது.

சஞ்சு சாம்சன் அதிரடி

இந்தியா 249 ரன்கள் குவிப்பு

டாஸில் தோற்று முதலில் பேட்டிங் செய்த இந்திய கிரிக்கெட் அணிக்கு சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் கூட்டணி அதிரடியான தொடக்கம் அமைத்துக் கொடுத்தது.

இஷான் கிஷன் 22 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, மறுமுனையில் சஞ்சு சாம்சன் 41 பந்துகளில் 82 ரன்கள் குவித்து அசத்தினார்.

அதைத் தொடர்ந்து களம் புகுந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் திலக் வர்மா கூட்டணி 83 ரன்கள் சேர்க்க, இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 249 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.

மீண்டு வந்த வெஸ்ட் இண்டீஸ்

மயங்க் யாதவ் கொடுத்த தொடக்க அதிர்ச்சி

250 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கிய பயணத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இந்தியப் பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் ஒரே ஓவரில் நிக்கோலஸ் பூரன் மற்றும் ஷிம்ரான் ஹெட்மையர் ஆகிய இருவரையும் வீழ்த்தி கடும் அதிர்ச்சி அளித்தார்.

பவர்ஃப்ளேவின் இறுதி ஓவரில் ரோவ்மேன் பாவெல் (24) விக்கெட்டையும் இந்தியா கைப்பற்றியதால், இந்திய அணியின் வெற்றி உறுதியானது போல் தோன்றியது.

ஆனால், அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் ஷாய் ஹோப் மற்றும் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் கூட்டணி ஆட்டத்தின் போக்கையே தலைகீழாக மாற்றியது

ADVERTISEMENT

ஷாய் ஹோப்

ஷாய் ஹோப் அதிவேக சதம் அடித்து சாதனை

பொறுப்புடன் ஆடிய கேப்டன் ஷாய் ஹோப் வெறும் 45 பந்துகளில் 102* ரன்கள் விளாசி, டி20 போட்டிகளில் அதிவேக சதம் அடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

அவருக்கு ஈடுகொடுத்து ஆடிய ரூதர்ஃபோர்ட் 37 பந்துகளில் 84 ரன்கள் குவித்து 120 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

இறுதிக்கட்டத்தில் ரொமாரியோ ஷெப்பர்ட் தனது பங்கிற்கு அதிரடி காட்ட, வெஸ்ட் இண்டீஸ் அணி லாவகமாக வெற்றி இலக்கை எட்டி சர்வதேச டி20 கிரிக்கெட்டின் இரண்டாவது மிகப்பெரிய ரன் சேஸிங் வெற்றி என்ற வரலாறு படைத்தது.

ADVERTISEMENT