சச்சின் டெண்டுல்கருடன் ஷுப்மன் கில்லை ஒப்பிட்டு பாராட்டிய பந்துவீச்சு ஜாம்பவான் வாசிம் அக்ரம்!
செய்தி முன்னோட்டம்
சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் 2023 இல், இளம் பேட்டர் ஷுப்மன் கில், அடுத்தடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
ஷுப்மன் கில் 17 போட்டிகளில் 890 ரன்களை அடித்து, சீசனின் அதிக ரன் எடுத்த வீரராக உருவெடுத்தார்.
ஐபிஎல்லில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கு முன்பு, கில் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டிலும் சிறப்பாக செயல்பட்டு மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சதம் அடித்துள்ளார்.
இதில் ஒருநாள் போட்டியில் அடித்த இரட்டை சதமும் அடங்கும். இந்நிலையில், அவரது நிலையான நல்ல ஆட்டத்தை பார்த்த பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம், ஷுப்மன் கில்லை இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உடன் ஒப்பிட்டு பேசினார்.
pakistan players praises gill
ஷுப்மன் கில் குறித்து வாசிம் அக்ரம் பேசியதன் முழு விபரம்
கில் போன்ற ஒரு வீரருக்கு பந்து வீசும்போது, டி20 வடிவத்தில் கூட, முதல் 10 ஓவர்களில் ஒரு நாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கருக்கு பந்து வீசுவது போல் இருக்கிறது என்று அக்ரம் கூறினார்.
அக்ரமின் ஒப்பீட்டை பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சல்மான் பட்டும் வழிமொழிந்துள்ளார்.
மேலும் கடந்த சில மாதங்களில் அவர் சிறப்பாகச் செயல்பட்டுள்ளதால் இந்த ஒப்பீட்டுக்கு தகுதியானவர் எனத் தெரிவித்துள்ளார்.
"இவை அவருக்குத் தகுதியான கருத்துக்கள். உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராகக் கருதப்படும் வாசிம் அக்ரம் இவ்வாறு கூறியிருப்பது கில்லுக்கு பெருமையான தருணம்." என்று தனது யூடியூப் சேனலில் பேசினார்.
இதற்கிடையே வெற்றிகரமான ஐபிஎல் தொடருக்குப் பிறகு, கில் இப்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்க தயாராகி வருகிறார்.