
சிஎஸ்கேவுக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸின் ட்ரம்ப் கார்டு இந்த வீரர் தான் : வீரேந்திர சேவாக் கருத்து
செய்தி முன்னோட்டம்
கடந்த ஆண்டு ஐபிஎல்லில் அறிமுக அணியாக களமிறங்கி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ள குஜராத் டைட்டன்ஸ், இந்த ஆண்டு தொடர்ந்து இரண்டாவது முறையாக பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
ஐபிஎல் 2022 இல், லீக் போட்டியில் முதலிடம் பிடித்து அசத்தியது போல் ஐபிஎல் 2023 இலும், புள்ளிப்பட்டியலில் முதலிடத்துடன் முடித்துள்ளது.
இந்நிலையில் பிளேஆப் சுற்றின் முதல் குவாலிஃபையர் போட்டியில் செவ்வாய்க்கிழமை (மே 23) சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் மோத உள்ளது.
இரு அணிகளும் இதுவரை மூன்று போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், மூன்றிலுமே குஜராத் டைட்டன்ஸ் வென்றுள்ளது, அந்த அணிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.
sehwag about gujarat titans
குஜராத் டைட்டன்ஸ் அணி குறித்து வீரேந்திர சேவாக் கருத்து
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், குஜராத் அணியின் பேட்டிங்கில் ஷுப்மன் கில் வலுவான வீரராக இருந்தாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இந்த போட்டியில் ரஷீத் கான் தான் ஹர்திக் பாண்டியாவின் துருப்புச் சீட்டாக இருப்பார் என்று தெரிவித்துள்ளார்.
எதிரணி நல்ல பார்ட்னர்ஷிப் அமைப்பதை முறியடிக்க விரும்பும் போது, ரஷீத் கானை அந்த அணி பயன்படுத்தும் விதம் அபாரமாக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ரஷீத் கான் 2017 இல் அறிமுகமானதிலிருந்து ஐபிஎல்லில் மிகவும் நிலையான செயல்திறன் கொண்டவர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.
இதுவரை ஐபிஎல் 2023ல், ரஷித் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி, தற்போது முகமது ஷமியுடன் இணைந்து அதிக விக்கெட் வீழ்த்தியவராகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.