LOADING...
சவுரவ் கங்குலியின் சாதனையை முறியடித்த விராட் கோலி: ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்
சவுரவ் கங்குலியின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி

சவுரவ் கங்குலியின் சாதனையை முறியடித்த விராட் கோலி: ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்

எழுதியவர் Sekar Chinnappan
Jan 11, 2026
06:08 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மற்றொரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளார். வடோதராவில் உள்ள கோடாம்பி மைதானத்தில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடுவதன் மூலம், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் சாதனையை அவர் முறியடித்துள்ளார். இதன் மூலம் இந்தியாவிற்காக அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடிய வீரர்களின் பட்டியலில் கோலி முன்னேறியுள்ளார். சவுரவ் கங்குலி இந்தியாவிற்காக மொத்தம் 308 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருந்தார். ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 11) நியூசிலாந்துக்கு எதிராகக் களமிறங்கிய விராட் கோலிக்கு இது 309வது ஒருநாள் போட்டியாகும்.

டாப் 5

டாப் 5 வீரர்கள்

இதன் மூலம் கங்குலியைப் பின்னுக்குத் தள்ளி, அதிக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர்களின் பட்டியலில் விராட் கோலி ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார். அவருக்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர், எம்எஸ் தோனி, ராகுல் டிராவிட் மற்றும் முகமது அசாருதீன் ஆகியோர் உள்ளனர். இதற்கிடையே, நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக ஷுப்மன் கில் செயல்படுகிறார். டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 2023 உலகக்கோப்பைக்குப் பிறகு இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக டாஸ் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலவரப்படி, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு 301 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

Advertisement