
ஐபிஎல்லில் அதிக 50+ ஸ்கோர்கள்; டேவிட் வார்னரை விஞ்சி விராட் கோலி புதிய சாதனை
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் வரலாற்றில் அதிக 50+ ஸ்கோர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி படைத்தார்.
முல்லன்பூரில் நடந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான அரைசதத்துடன், விராட் கோலி ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னரை முந்தி உயரடுக்கு பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார்.
இந்த இன்னிங்ஸுக்கு முன்பு, ஐபிஎல்லில் விராட் கோலி மற்றும் டேவிட் வார்னர் தலா 66 ஐம்பதுக்கும் மேற்பட்ட ஸ்கோர்களுடன் சமமாக இருந்தனர்.
இப்போது விராட் கோலி 67 ஐம்பதுக்கும் மேற்பட்ட ஸ்கோர்களுடன் சாதனை படைத்துள்ளார்.
அதைத் தொடர்ந்து டேவிட் வார்னர் (66), ஷிகர் தவான் (53), ரோஹித் ஷர்மா (45), மற்றும் கே.எல்.ராகுல் (43) ஆகியோர் உள்ளனர்.
அதிக அரைசதங்கள்
டி20 கிரிக்கெட்டில் அதிக அரைசதங்கள்
டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் நிலையான ரன் சேர்ப்பு ஐபிஎல்லுடன் முடிவடையவில்லை.
டி20 கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக அதிக அரைசதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் அவர் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
தற்போது அவர் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெய்லுடன் இரண்டாவது இடத்தைப் பகிர்ந்து கொள்கிறார்.
இருவரும் தலா 110 அரைசதங்களும் அடித்துள்ளார். உலகளாவிய அளவில் டி20யில் டேவிட் வார்னர் 116 அரைசதங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
அதே நேரத்தில் பாபர் அசாம் (101) மற்றும் ஜோஸ் பட்லர் (94) ஆகியோர் முதல் ஐந்து இடங்களைப் பிடித்துள்ள இதர வீரர்கள் ஆவர்.