பாகிஸ்தான் மாற்றுத் திறனாளி ரசிகரை நெகிழ வைத்த விராட் கோலி; வைரலாகும் காணொளி
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இலங்கையின் கண்டியில் செப்டம்பர் 2 ஆம் தேதி நடக்க உள்ள பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு தயாராகி வருகிறார். உலகம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்ட விராட் கோலி, போட்டிக்கு முன்னதாக கண்டியில் பாகிஸ்தானை சேர்ந்த மாற்றுத் திறனாளி ரசிகர் ஒருவரை சந்தித்ததாக காணொளி ஒன்று வைரலாகி வருகிறது. அதில் ரசிகர் கோலியிடம், "உங்களைப் போல யாரும் கிடையாது" என சொல்ல, அவர் தனது பாகிஸ்தான் ரசிகரை கட்டிப்பிடிக்கும் காட்சி அதில் இடம் பெற்றுள்ளது. இந்த காணொளி ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், இது பழைய காணொளி என்றும், தற்போது நடந்ததுபோல் தவறுதலாக பரப்பப்படுகிறது என்றும் தெரிய வந்துள்ளது.