கேகேஆர் அணிக்கு எதிராக அதிக ரன்கள்: சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி?
செய்தி முன்னோட்டம்
புதன்கிழமை (ஏப்ரல் 26) நடைபெற உள்ள ஐபிஎல் 2023 தொடரின் 36வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிக்கு எதிராக விராட் கோலி தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் நட்சத்திர வீரரான கோலி ஐபிஎல்லில் கேகேஆருக்கு எதிராக இதுவரை 28 இன்னிங்ஸ்களில் விளையாடி 129.12 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 807 ரன்கள் எடுத்துள்ளார்.
இதில் நான்கு அரைசதங்கள் மற்றும் ஒரு சதமும் அடங்கும்.
போட்டி நடக்கும் சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல்லில் 2,545 ரன்களை குவித்து, அதிக ரன்களை குவித்தவராக கோலி உள்ளார். ஐபிஎல் 2023 இல், இந்த மைதானத்தில் கோலி 82*, 61, 50, 6 மற்றும் 0 ரன்களை எடுத்துள்ளார்.
most runs against kkr
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ஐந்தாவது அதிக ரன் குவித்த வீரர்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் தற்போது கோலி ஐந்தாவது இடத்தில் உள்ளார்.
இந்த பட்டியலில் முதல் 2 இடங்களில் டேவிட் வார்னர் (1,075 ரன்கள்) மற்றும் ரோஹித் ஷர்மா (1,040 ரன்கள்) ஆகியோர் உள்ளனர்.
சுரேஷ் ரெய்னா (829 ரன்கள்), ஷிகர் தவான் (850 ரன்கள்) ஆகியோர் முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் உள்ளனர்.
இந்நிலையில், கோலி புதன்கிழமை ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் ரெய்னா மற்றும் தவானை பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.