LOADING...
"கேப்டன் பதவியால் மனதளவில் முற்றிலுமாக உடைந்தேன்!" 4 ஆண்டுகளுக்குப் பின் மௌனம் கலைத்த விராட் கோலி!
தனது கேப்டன் பதவியை ராஜினாமா குறித்து 4 ஆண்டுகளுக்குப் பின் மௌனம் கலைத்த விராட் கோலி

"கேப்டன் பதவியால் மனதளவில் முற்றிலுமாக உடைந்தேன்!" 4 ஆண்டுகளுக்குப் பின் மௌனம் கலைத்த விராட் கோலி!

எழுதியவர் Vasuki
May 20, 2026
12:08 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய கிரிக்கெட் அணியின் மிக வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாக வலம் வந்த விராட் கோலி, கடந்த 2022-ஆம் ஆண்டு ஜனவரியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் தோல்விக்குப் பின் திடீரென தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகிற்கும் அதிர்ச்சி அளித்தார். டி20 மற்றும் ஒருநாள் போட்டி கேப்டன் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட சில மாதங்களிலேயே அவர் எடுத்த இந்த அதிரடி முடிவு அப்போது பெரும் விவாதங்களை கிளப்பியது. இந்நிலையில், கேப்டன் பதவியை விட்டு விலகி நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட சூழலில், தான் ஏன் அந்த விபரீத முடிவை எடுத்தேன் என்பது குறித்து விராட் கோலி முதன்முறையாக தற்போது வெளிப்படையாக மௌனம் கலைத்துள்ளார்.

எரிபொருள் தீர்ந்த நிலையில் விடைபெற்றேன்

கேப்டன் பதவி ராஜினாமா

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-2 என இழந்த அடுத்த நாளே விராட் கோலி தனது கேப்டன்சி விலகல் முடிவை அறிவித்திருந்தார். அதுகுறித்து தற்போது பேசியுள்ள அவர், "ஒரு கட்டத்தில் நான் அணியின் பேட்டிங் மற்றும் கேப்டன்சி என இரண்டிற்கும் மையப்புள்ளியாக மாறினேன். இவை இரண்டும் எனது அன்றாட வாழ்க்கையில் எவ்வளவு பெரிய சுமையை ஏற்படுத்தும் என்பதை நான் ஆரம்பத்தில் உணரவில்லை. இந்திய கிரிக்கெட்டை உச்சத்தில் வைத்திருக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்கு மட்டுமே என்னிடம் இருந்ததால், என் மீதான அழுத்தத்தை நான் கவனிக்கத் தவறினேன். இதனால், நான் கேப்டன் பதவியை விட்டு விலகும்போது, என்னிடம் உள்ள ஆற்றல் அனைத்தும் முழுமையாகத் தீர்ந்துவிட்டிருந்தது (Completely Spent). எனக்குள் எதுவும் எஞ்சியிருக்கவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

வரலாற்று வெற்றி

விராட் கோலியின் கேப்டன்சி பயணம்

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்த விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி படைத்த சாதனைகள் மறக்க முடியாதவை. 2014 ஆம் ஆண்டு அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் எம்.எஸ்.தோனிக்கு ஏற்பட்ட காயம் காரணமாக முதன்முறையாக இந்திய அணியை வழிநடத்தினார். 2015-ல் இலங்கை மண்ணில் 1993-க்குபிறகு பெற்ற முதல் வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் தொடர் வெற்றி. ரவி சாஸ்திரி - கோலி கூட்டணியில் தொடர்ந்து 5 ஆண்டுகள் ஐசிசி டெஸ்ட் மேஸை வென்று முதலிடத்தை தக்கவைத்தது. 2018-19 காலகட்டத்தில் ஆஸ்திரேலிய மண்ணில் பார்டர்-கவாஸ்கர் கோப்பையை வென்று சாதனை படைத்தது. ஒட்டுமொத்தமாக அவர் வழிநடத்திய 68 டெஸ்ட் போட்டிகளில், இந்திய அணி 40 போட்டிகளில் அபார வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

Advertisement

ஒன்பது ஆண்டுகள்

யாரும் கேட்காத அந்த ஒரு கேள்வி

கேப்டன்சி என்பது வெறும் ஆட்ட உத்திகளை வகுப்பது மட்டுமல்ல, அது வீரர்களை நிர்வகிக்கும் கலை என்று குறிப்பிட்ட கோலி, சகவீரர்களின் நலனில் கவனம் செலுத்திய தனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தைப் பகிர்ந்துகொண்டார். தலைமைபொறுப்பில் இருக்கும்போது நீங்கள் உங்களைபற்றி யோசிக்க முடியாது. உங்களுடன் விளையாடுபவர்களின் மனநிலையைபுரிந்து கொண்டு, அவர்களிடம் இருந்து சிறந்தஆட்டத்தை வெளிக்கொண்டு வருவதிலேயே எப்போதும் கவனம் இருக்கும். இந்த ஓட்டத்தில், 'நீ நன்றாக இருக்கிறாயா?' என்று உங்களிடம் யாராவது கேட்பார்களா என்ற எண்ணம்கூட உங்கள் மனதில் தோன்றாது. ஆனால், எனது கேப்டன்சி காலத்தின் இறுதிக்கட்டத்தில் நான் திரும்பிப் பார்த்தபோதுதான் ஒன்றை உணர்ந்தேன்; கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஒருவர்கூட என்னிடம் வந்து, 'நீ எப்படி இருக்கிறாய்?' என்ற கேள்வியைகேட்கவே இல்லை" என்று கோலி வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார்.

Advertisement