பிஎஸ்ஏ சேலஞ்சர் ஸ்குவாஷ் சாம்பியன் பட்டம் வென்றார் வேலவன் செந்தில்குமார்
ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் நடைபெற்ற பிஎஸ்ஏ சேலஞ்சர் ஸ்குவாஷ் போட்டியில், இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் மற்றும் அகன்ஷா சலுங்கே ஆகியோர் வெற்றி பெற்றனர். ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஜோசப் வைட்டை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய வீரர் வேலவன் செந்தில்குமார் 11-8, 11-9, 2-11, 11-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர், ஏற்கனவே 2016 ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ், 2017 பிரிட்டிஷ் ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப், 2018 மேடிசன் ஓபன் உள்ளிட்ட பட்டங்களை வென்றுள்ளார். இதற்கிடையே, மகளிர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான அகன்க்ஷா சலுங்கே, இறுதிப்போட்டியில் சகநாட்டவரான தன்வி கண்ணாவுக்கு எதிராக 9-11, 12-10, 8-11, 11-8, 13-11 என்ற கணக்கில் வென்று பட்டத்தைக் கைப்பற்றினார்.