ஒருநாள் போட்டியில் அறிமுகமான இரண்டாவது வயதான இந்தியர் ஆனார் வருண் சக்ரவர்த்தி; முதலிடத்தில் இருப்பது யார்?
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி தனது 33வது வயதில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 9) கட்டாக்கில் அறிமுகமானார்.
இந்த போட்டியில் அவர் மற்றும் விராட் கோலியை விளையாடும் லெவன் அணியில் சேர்த்ததன் மூலம், இந்திய அணி இரண்டு மாற்றங்களைச் செய்தது.
இதற்கிடையே, வருண் சக்ரவர்த்தி, இந்திய கிரிக்கெட் அணிக்காக ஒருநாள் போட்டியில் அறிமுகமான இரண்டாவது அதிக வயதானவர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார்.
முன்னதாக, 1974 இல் 36 வயது 138 நாட்களில் அறிமுகமான முன்னாள் விக்கெட் கீப்பர்-பேட்டர் ஃபரூக் என்ஜினியர் முதலிடத்தில் உள்ள நிலையில், அவருக்கு அடுத்த இடத்தில் வருண் சக்ரவர்த்தி உள்ளார்.
32 வயது
32 வயதுக்கு மேல் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டியில் அறிமுகமானவர்கள்
வருண் சக்ரவர்த்தி 32 வயதிற்குப் பிறகு முதல் ஒருநாள் கிரிக்கெட் தொப்பியைப் பெற்ற இந்தியர்களின் உயரடுக்கு குழுவில் இணைந்தார்.
வருண் சக்ரவர்த்தி 33 வருடங்கள் 164 நாட்களில் இந்தியாவுக்காக அறிமுகமாகியுள்ள நிலையில், அவருக்கு அடுத்த இடத்தில் அஜித் வடேகர் 33 வருடங்கள் 103 நாட்களுடன் 1974இல் அறிமுகமானார்.
நான்காவது இடத்தில் உள்ள திலீப் தோஷி (1980) 32 வருடங்கள் 350 நாட்களிலும், ஐந்தாவது இடத்தில் உள்ள சையத் அபித் அலி (1974) 32 வருடங்கள் 307 நாட்களிலும் அறிமுகமாகினர்.
இதில் திலீப் தோஷி மட்டும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அறிமுகமானார். மற்ற நான்கு பேரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமாகினர்.
இதில் குறிப்பிடத்தக்க வகையில், வருண் சக்ரவர்த்தி மட்டுமே உள்நாட்டுத் தொடரில் அறிமுகமாகியுள்ளார்.