வைரல் வீடியோ: 15 வயது சிறுவன் வைபவ்வை வம்புக்கு இழுத்த ஆர்சிபி வீரர்! வைபவ் கொடுத்த 'மாஸ்' பதிலடி
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு முன்னதாக, ஒரு சுவாரஸ்யமான சம்பவம் அரங்கேறியது. ராஜஸ்தான் அணியின் 15 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷியை, ஆர்சிபி அணியின் விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா கிண்டல் செய்ய முயன்றார். இது தொடர்பான வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போலப் பரவி வருகிறது. மைதானத்தில் அதிரடி காட்டும் வைபவ், வெளியிலும் தனது பேச்சால் ஆர்சிபி வீரரை நிலைகுலையச் செய்துள்ளார்.
வைபவ் கேள்வி
ஏன் என்கிட்ட மட்டும் அடம் பிடிக்கிறீங்க?
பயிற்சியின் போது வைபவ்வின் பேட்டை வாங்கி சோதித்த ஜிதேஷ் சர்மா, அந்த பேட் நன்றாக இருப்பதாகக் கூறி கிண்டலாக நன்றி தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த வைபவ், "அண்ணே, ஏன் இப்படி பண்றீங்க? நான் சொல்லிக் கொடுத்த ட்ரிக்கை என்கிட்டயே யூஸ் பண்றீங்க. உங்க டீம்ல தான் அவ்வளவு பேட்ஸ்மேன் இருக்காங்களே, அவங்ககிட்ட கேட்காம என்கிட்ட ஏன் வர்றீங்க?" எனச் சிரித்துக்கொண்டே கேட்டார். அதற்கு ஜிதேஷ், "நான் ஏன் மத்தவங்ககிட்ட கேட்கணும்? நான் வேற யார்கிட்டயாவது கேட்டேனான்னு சொல்லு" எனத் தொடர்ந்து வைபவ்வை வம்புக்கு இழுத்தார்.
வைபவ்வின் பதில்
வைரலாகும் வைபவ்வின் 'பன்ச்' பதில்
ஜிதேஷ் சர்மாவின் கிண்டலுக்கு வைபவ் சூர்யவன்ஷி அளித்த பதில் தான் ஹைலைட். "நான் தான் ஏற்கனவே சொல்லிட்டேன்ல அண்ணே.. ஐபிஎல் முடிஞ்சதும் இந்த பேட்டை உங்களுக்குத் தர்றேன்னு. அப்புறம் ஏன் இப்பவே வேணும்னு இவ்வளவு அடம் பிடிக்கிறீங்க?" என வைபவ் கேட்க, அங்கிருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மேலாளர் ரோமி பிந்தர் உட்பட அனைவரும் சிரிப்பில் ஆழ்ந்தனர். 15 வயதான ஒரு சிறுவன் இவ்வளவு சாமர்த்தியமாகவும், கலகலப்பாகவும் ஒரு சீனியர் வீரரிடம் உரையாடுவது ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
🚨 First time ever: Vaibhav offers to give his bat! 😂🔥 pic.twitter.com/y5pBnpEri3
— Rajasthan Royals (@rajasthanroyals) April 9, 2026
போட்டி நிலவரம்
ராஜஸ்தானின் அதிரடி
இந்த கலகலப்பான சூழலுக்குப் பிறகு தொடங்கிய போட்டியில், கௌஹாத்தி மைதானத்தில் ஆர்சிபி முதலில் பேட்டிங் செய்தது. ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் 40 பந்துகளில் 63 ரன்கள் குவித்து அணியைத் தாங்கிப் பிடித்தார். கடைசி நேரத்தில் ரொமாரியோ ஷெப்பர்ட் மற்றும் வெங்கடேஷ் ஐயர் அதிரடி காட்ட, ஆர்சிபி 201 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் ரவி பிஷ்னோய், பிரிஜேஷ் சர்மா மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்தப் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி தனது பேட்டிங்கால் மீண்டும் ஒருமுறை சாதனை படைத்து ஆட்டநாயகன் விருது வென்றது குறிப்பிடத்தக்கது.