Page Loader
2027 மகளிர் உலகக்கோப்பை போட்டியை இணைந்து நடத்த அமெரிக்கா மற்றும் மெக்சிகோ விருப்பம்
2027 மகளிர் உலகக்கோப்பை போட்டியை இணைந்து நடத்த அமெரிக்கா மற்றும் மெக்சிகோ விருப்பம்

2027 மகளிர் உலகக்கோப்பை போட்டியை இணைந்து நடத்த அமெரிக்கா மற்றும் மெக்சிகோ விருப்பம்

எழுதியவர் Sekar Chinnappan
Apr 20, 2023
02:30 pm

செய்தி முன்னோட்டம்

2027 மகளிர் கால்பந்து உலகக் கோப்பையை இணைந்து நடத்துவதற்கான ஏலத்தை அமெரிக்காவும் மெக்சிகோவும் ஃபிஃபாவிடம் சமர்ப்பிப்பதாக அந்நாடுகளின் கூட்டமைப்பு புதன்கிழமை (ஏப்ரல் 19) தெரிவித்தது. இதன்படி யுஎஸ்ஏ கால்பந்து கூட்டமைப்பு மற்றும் மெக்சிகன் கால்பந்து கூட்டமைப்பு மே 19 ஆம் தேதிக்கு முன்னதாக தங்கள் ஏல ஒப்பந்தத்தை முறையாகச் சமர்ப்பிக்க வேண்டும். அமெரிக்கா முன்பு 1999 இல் பெண்கள் காலப்ந்து உலகக் கோப்பையை நடத்தியது. இதுவரை மகளிர் கால்பந்தில் நான்கு உலக கோப்பைகளை வென்றுள்ள அமெரிக்கா, 1999 இல் தனது இரண்டாவது பதக்கத்தை கைப்பற்றியது. மேலும் 2003 இல் மெக்சிகோ மகளிர் கால்பந்து உலகக்கோப்பை போட்டியை நடத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் இணைந்து 2023 ஆம் ஆண்டு போட்டியை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

USA Mexico Football association statement

அமெரிக்கா மற்றும் மெக்சிகோ கால்பந்து கூட்டமைப்பு தலைவர்கள் கருத்து

யுஎஸ்ஏ கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் சிண்டி பார்லோ கோன் கூறுகையில், "பெண்கள் விளையாட்டுக்கு அமெரிக்கா எப்போதுமே உலகளாவிய தலைவராக இருந்து வருகிறது. மேலும் பெண்கள் கால்பந்தாட்டத்திற்கான உலகின் முதன்மையான நிகழ்வை மெக்சிகோவுடன் இணைந்து நடத்துவதில் நாங்கள் பெருமைப்படுவோம்" என்றார். மெக்சிகன் கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் யோன் டி லூயிசா மேலும் கூறியதாவது: "மெக்சிகோவில் பெண்கள் கால்பந்து கடந்த ஐந்து ஆண்டுகளில் நீடித்த வளர்ச்சியை அடைந்துள்ளது மற்றும் அதன் வளர்ச்சி மெக்சிகன் கால்பந்து கூட்டமைப்பின் மூலோபாய முன்னுரிமைகளில் ஒன்றாகும்." என்றார். இதற்கிடையே 2026 ஆம் ஆண்டு ஆண்கள் கால்பந்து உலகக் கோப்பையை மெக்சிகோ, அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் இணைந்து நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.