அடுத்த செய்திக் கட்டுரை

மகளிர் ஐபிஎல் 2023 : உ.பி.வாரியர்ஸ் அணியின் கேப்டனாக அலிஷா ஹீலி நியமனம்!
எழுதியவர்
Sekar Chinnappan
Feb 22, 2023
04:45 pm
செய்தி முன்னோட்டம்
மும்பையில் மார்ச் 4 ஆம் தேதி தொடங்க உள்ள மகளிர் ஐபிஎல் தொடரின் முதல் சீசனில், உ.பி.வாரியர்ஸ் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலியாவின் நட்சத்திர விக்கெட் கீப்பர்-பேட்டர் அலிசா ஹீலி நியமிக்கப்பட்டுள்ளார்.
மகளிர் கிரிக்கெட்டில் மிகச் சிறந்த பேட்டர்களில் ஒருவரான ஹீலி, ஆஸ்திரேலியாவுக்காக 139 டி20 போட்டிகளில் விளையாடி, ஒரு சதம் மற்றும் 14 அரைசதங்களுடன் 2,446 ரன்கள் எடுத்துள்ளார்.
டி20 போட்டிகளில் விக்கெட் கீப்பராக 110 பேரை ஆட்டமிழக்கச் செய்து, சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவராகவும் அவர் கருதப்படுகிறார்.
மார்ச் 5 ஆம் தேதி டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் உ.பி.வாரியர்ஸ் தனது முதல் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
உ.பி.வாரியர்ஸ் அணியின் கேப்டன்
UP Warriorz have named Alyssa Healy as their captain for #WPL2023 pic.twitter.com/Aj1qyQx0Bw
— ESPNcricinfo (@ESPNcricinfo) February 22, 2023