இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் பழங்குடியின பெண் மின்னு மணிக்கு வாய்ப்பு
கேரளவைச் சேர்ந்த பழங்குடியினப் பெண், மின்னு மணி, வங்கதேச சுற்றுப்பயணத்திற்கான இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்துள்ளார். இதன் மூலம் தேசிய மகளிர் கிரிக்கெட் அணியில் இடம் பெறும் முதல் கேரள கிரிக்கெட் வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். வயநாட்டில் உள்ள குறிச்சிய பழங்குடியினத்தைச் சேர்ந்த மின்னு மணி, இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வானது குறித்து பேசுகையில், "நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். வங்க தேசத்திற்கு எதிரான டி20 போட்டிக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பிறகு நான் அனுபவித்ததை விவரிக்க வார்த்தைகள் இல்லை. ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், 2019 இல் இந்தியா ஏ அணி அங்கு சுற்றுப்பயணம் செய்தபோது நான் வங்கதேசத்தில் விளையாடிய அனுபவத்தை கொண்டுள்ளேன்." என்று கூறினார்.
வங்கதேச சுற்றுப்பயணத்திற்கான இந்திய மகளிர் அணி
இந்தியா ஜூலை 9ல் மிர்பூரில் தொடங்கும் தலா மூன்று ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது. டி20 அணி: ஹர்மன்ப்ரீத், மந்தனா, தீப்தி ஷர்மா, ஷஃபாலி, ஜெமிமா, யாஸ்திகா பாட்டியா, ஹர்லீன் தியோல், தேவிகா வைத்யா, உமா செத்ரி, அமன்ஜோத் கவுர், எஸ். மேகனா, பூஜா, மேக்னா, அஞ்சலி சர்வானி, மோனிகா படேல், ராஷி கனோஜியா, அனுஷா பாரெட்டி, மின்னு மணி. ஒருநாள் அணி: ஹர்மன்பிரீத் , மந்தனா, தீப்தி ஷர்மா, ஷஃபாலி, ஜெமிமா, யாஸ்திகா பாட்டியா, ஹர்லீன் தியோல், தேவிகா வைத்யா, உமா செத்ரி, அமன்ஜோத் கவுர், பிரியா புனியா, பூஜா வஸ்த்ரகர், மேக்னா, அஞ்சலி சர்வானி, மோனிகா பட்டேல், ராஷி கனோஜியா, அனுஷா பரெட்டி, சினே ராணா.