
INDvsAUS Final : ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டிகளில் சிறப்பாக பந்துவீசிய டாப் 5 இந்தியர்கள்
செய்தி முன்னோட்டம்
ஞாயிற்றுக்கிழமை (நவ.19) அகமதாபாத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி, தனது நான்காவது ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் பங்கேற்கிறது.
இந்தியா 1983, 2003 மற்றும் 2011 ஆகிய மூன்று உலகக்கோப்பை இறுதிப் போட்டிகளில் பங்கேற்று இரண்டில் வென்றுள்ளது. அதே நேரத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2003 மோதலில் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில், உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய
பந்துவீச்சாளர்களின் டாப் ஐந்து சிறந்த பந்துவீச்சை இதில் பார்க்கலாம்.
யுவராஜ் சிங் (2/49, 2011) : உலகக்கோப்பை இறுதிப் போட்டியில், இலங்கையின் குமார் சங்கக்காரா மற்றும் திலன் சமரவீர ஆகியோரின் விலை மதிப்பற்ற இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்தியா தனது இரண்டாவது பட்டத்தை வென்றதற்கு உதவினார்.
Indian Bowlers Top 5 spells in ODI World Cup Finals
1983 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய பந்துவீச்சு
ஹர்பஜன் சிங் (2/49,2003): ஹர்பஜன் சிங் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர்களான ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் மேத்யூ ஹெய்டன் ஆகிய இருவரையும் அவுட்டாக்கினார். அந்த ஆட்டத்தில் இந்தியாவின் ஒரே விக்கெட் வீழ்த்தியவர் இவர் மட்டுமேயாகும்.
பல்விந்தர் சந்து (2/32,1983): சந்துவின் பந்துவீச்சு இந்தியா முதல்முறையாக கோப்பையை வென்றதில் முக்கியப் பங்கு வகித்தது. வெஸ்ட் இண்டீஸின் கார்டன் க்ரீனிட்ஜை நீக்கிய சந்து, பின்னர் ஃபவுட் பச்சஸை வெளியேற்றினார்.
மதன் லால் (3/31,1983): டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ், விவ் ரிச்சர்ட்ஸ் மற்றும் லாரி கோம்ஸ் ஆகியோரை அடுத்தடுத்து நீக்கி அதிர வைத்தார்.
மொஹிந்தர் அமர்நாத் (3/12,1983): இவரது பந்துவீச்சு இந்தியாவிற்கு ஆட்டத்தை முடிக்க உதவியது. மைக்கேல் ஹோல்டிங், ஜெஃப் டுஜான் மற்றும் மால்கம் மார்ஷல் ஆகியோரின் விக்கெட்டுகளைப் பெற்றார்.