
சாஹலின் போஸை காப்பியடிக்க பயிற்சி வேணும் : வைரலாகும் ரெய்னாவின் ட்விட்டர் பதிவு!
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர லெக் ஸ்பின்னர் யுஸ்வெந்திர சாஹலின் பிரபலமான போஸுடன், முன்னாள் இந்தியவீரர் சுரேஷ் ரெய்னா வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.
வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 24) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ரெய்னா ஒரு படத்தைப் பகிர்ந்தார். அதில் சாஹாலுடன் இருக்கும் ரெய்னா, சாஹலின் புகழ்பெற்ற போஸை சரியாக செய்ய நிறைய பயிற்சி எடுக்க வேண்டும் என்று கேலி செய்தார்.
சாஹலின் பிரபலமான இந்த போஸ், 2019 உலகக் கோப்பையில் இந்தியா-இலங்கை இடையிலான மோதலின் போது ஓய்வளிக்கப்பட்டதால், வீரர்களுக்கு டிரிங்க்ஸ் கொடுப்பதற்காக பவுண்டரி லைனுக்கு வெளியே சாய்ந்து படுத்திருந்தபோது எடுக்கப்பட்டது.
இது அப்போது வைரலாகவே, பின்னர் பல்வேறு முக்கிய தருணங்களில் இதே போஸை கொடுப்பதை வாடிக்கையாக்கிக் கொண்டார்.
ட்விட்டர் அஞ்சல்
ரெய்னா ட்விட்டர் பதிவு
Trying the most famous pose ever .. Took a lot of training and regular practice at the ground 😂 .. All the best for the upcoming series brother @yuzi_chahal 💪#justforfun #posemaker pic.twitter.com/LXGpGw1PQW
— Suresh Raina🇮🇳 (@ImRaina) February 24, 2023