அடுத்த செய்திக் கட்டுரை

கோலாகலமாக துவங்குகிறது TNPL சீசன் 8: எங்கே பார்க்கலாம்?
எழுதியவர்
Venkatalakshmi V
Jul 05, 2024
05:37 pm
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் இன்று முதல் தொடங்கவிருக்கிறது.
இந்த தொடரின் போட்டிகள், கோவை, திருநெல்வேலி, சேலம், திண்டுக்கல் மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் நடத்தப்படும்.
மொத்தம் 32 போட்டிகள் அடங்கிய இந்த தொடர் இன்று தொடங்கி, வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி நிறைவடைகிறது.
இந்த தொடரின் அனைத்து போட்டிகளும் இரவு 7.15 மணிக்கு நடைபெறும். எனினும் 2 போட்டிகள் நடைபெறும் நாட்களில் மட்டும் பிற்பகல் 3.15 மணிக்கும், இரவு 7.15 மணிக்கும் நடத்தப்படும்.
இன்று முதல் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகளும் மோதுகின்றன.
இந்த போட்டித்தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்-1 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்-1 HD சேனலில் நேரடி ஒளிபரப்பில் பார்க்கலாம்.