LOADING...
தாய்லாந்து ஓபன் 2023 : நட்சத்திர வீராங்கனை பிவி சிந்து அதிர்ச்சித் தோல்வி!
தாய்லாந்து ஓபன் முதல் சுற்றில் பிவி சிந்து அதிர்ச்சித் தோல்வி

தாய்லாந்து ஓபன் 2023 : நட்சத்திர வீராங்கனை பிவி சிந்து அதிர்ச்சித் தோல்வி!

எழுதியவர் Sekar Chinnappan
May 31, 2023
05:27 pm

செய்தி முன்னோட்டம்

புதன்கிழமை (மே 31) நடைபெற்ற தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பிவி சிந்து, கனடாவின் மிச்செல் லியிடம் 8-21, 21-18, 18-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். இந்த போட்டிக்கு முன், பிவி சிந்து மிச்செல் லியுடன் ஒன்பது போட்டிகளில் மோதியுள்ள நிலையில், அனைத்திலும் வெற்றி பெற்றிருந்த நிலையில், இதில் தோல்வி அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முதல் செட்டை இழந்த நிலையில் இரண்டாவது செட்டை கைப்பற்றினார். மேலும் மூன்றாவது செட்டில் தொடர்ச்சியாக 10 புள்ளிகளை பெற்றதால் எப்படியும் வென்று விடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பின்னர் மிச்செல் லியிடம் மூன்றாவது செட்டை இழந்து தோல்வியைத் தழுவினார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement