ஒருநாள் உலகக்கோப்பையில் இந்திய அணியின் வரைவு போட்டி அட்டவணை கசிவு
இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஒருநாள் உலகக்கோப்பை அட்டவணையை வெளியிடுவதில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 11) முடிவடைந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் போது இது அறிவிக்கப்படும் என்று பிசிசிஐ செயலர் ஜெய் ஷா முன்னர் கூறியிருந்த நிலையில், அட்டவணை எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில், ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பைக்கான அட்டவணையின் வரைவு பட்டியல் தயாராக உள்ளதாகவும், இது ஐசிசியால் உறுதி செய்யப்பட்டு இந்த வாரத்தில் வெளியிடப்படும் என புது தகவல் வெளியாகி உள்ளது. மேலும், வரைவு அட்டவணையில் இந்தியா விளையாடும் போட்டிகள் குறித்த தகவல் மட்டும் தற்போது கசிந்துள்ளது.
இந்தியா விளையாடும் போட்டிகளின் பட்டியல்
இந்த வரைவு அட்டவணையின்படி, இந்திய கிரிக்கெட் அணி ஒன்பது மைதானங்களில் விளையாட உள்ளது. வரைவு பதிப்பின் படி இந்தியாவின் உலகக்கோப்பை அட்டவணை இந்தியா vs ஆஸ்திரேலியா, அக்டோபர் 8, சென்னை இந்தியா vs ஆப்கானிஸ்தான், அக்டோபர் 11, டெல்லி இந்தியா vs பாகிஸ்தான், அக்டோபர் 15, அகமதாபாத் இந்தியா vs வங்கதேசம், அக்டோபர் 19, புனே இந்தியா vs நியூசிலாந்து, அக்டோபர் 22, தர்மசாலா இந்தியா vs இங்கிலாந்து, அக்டோபர் 29, லக்னோ இந்தியா vs தகுதிச்சுற்றில் தேர்வாகும் அணி, நவம்பர் 2, மும்பை இந்தியா vs தென்னாப்பிரிக்கா, நவம்பர் 5, கொல்கத்தா இந்தியா vs தகுதிச்சுற்றில் தேர்வாகும் அணி, நவம்பர் 11, பெங்களூரு