கேப்டவுனில் இந்திய அணி தனது முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தது
கேப்டவுனில் நடைபெறும் தென்னாப்ரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்துவரும் இந்திய அணி, இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. இதுவரையில் இந்திய அணி, தென் ஆப்பிரிக்கா மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை கூட கைப்பற்றியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான், இந்திய அணி, இந்த டெஸ்ட் மேட்சில் வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளது. நியூலேண்ட்ஸில் இது இந்தியாவின் ஏழாவது போட்டியாகும். முன்னதாக இந்தியாவுக்கு டீன் எல்கர் தலைமையிலான தென்னாபிரிக்க அணி, 79 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.
கேப்டவுனில் இந்திய அணி தனது முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தது
பும்ராவின் அபார பந்து வீச்சு
முன்னதாக இந்திய அணி தரப்பில் அசத்தியமாக பந்துவீசிய பும்ரா 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். அதன் விளைவாக, தென்னாப்ரிக்க அணி தனது 2வது இன்னிங்சில், 36.5 ஓவர்களில், 176 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு, 79 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் எளிதான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 80 ரன்கள் அடித்து இந்த போட்டியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 28 ரன்கள் அடித்தார். தென்னாப்ரிக்க அணி தரப்பில் பர்கர், ரபடா மற்றும் மார்கோ ஜான்சன் ஆகியோர் தலா 1 விக்கெட்-ஐ வீழ்த்தினர்.