Page Loader
வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் இந்திய அணி செய்த 3 மோசமான சாதனைகள்
வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் இந்திய அணி செய்த 3 மோசமான சாதனைகள்

வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் இந்திய அணி செய்த 3 மோசமான சாதனைகள்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 14, 2023
04:56 pm

செய்தி முன்னோட்டம்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிராக 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட சுற்றுப்பயணத்தை இந்திய கிரிக்கெட் அணி முடித்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இந்திய அணி அனைத்துப் போட்டிகளிலும் எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யதார்த்த கள நிலவரம் நேர் மாறாக இருந்தது. டெஸ்ட் தொடரை இந்தியா 1-0 என்ற கணக்கில் வென்றது. இதில் ஒரு டெஸ்ட் டிராவில் முடிந்தது. அதே நேரத்தில் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஆனால், டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

india struggling in t20 as loses in west indies series

இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்திய வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடர்

டி20 கிரிக்கெட் தொடரை இழந்ததன் மூலம் உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்திய அணி சில மோசமான சாதனைகளையும் மைல்கற்களையும் பதிவு செய்தது. அவை பின்வருமாறு:- இந்தியா கடந்த 25 மாதங்களில் டி20 தொடரை இழந்தது இதுவே முதல்முறையாகும். இருதரப்பு தொடர்களைப் பொறுத்தவரை, 17ஆண்டுகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோற்றது இதுவே முதல் முறையாகும். இந்தத் தொடருக்கு முன், டி20 வரலாற்றில் ஒரு தொடரில் மூன்று போட்டிகளில் தோல்வியை பெற்றதில்லை. இந்த தொடரில் தான் இந்தியா முதல் முறையாக 3 போட்டிகளில் தொற்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி 2022 டி20 உலகக்கோப்பை மற்றும் 2023 ஒருநாள் உலகக்கோப்பைக்கு தகுதி பெறவில்லை என்பதை கருத்தில் கொள்ளும்போது, இந்திய அணியின் நிலை மிக பரிதாபமாக உள்ளது.