Page Loader
உலக பல்கலைகளுக்கு இடையேயான துப்பாக்கி சுடுதல் போட்டி: தங்கம் வென்றார் இளவேனில் வாலறிவன்
இந்த விளையாட்டு போட்டிகளில் இந்தியாவுக்கு கிடைக்கும் முதல் தங்க பதக்கம் இதுவாகும்.

உலக பல்கலைகளுக்கு இடையேயான துப்பாக்கி சுடுதல் போட்டி: தங்கம் வென்றார் இளவேனில் வாலறிவன்

எழுதியவர் Sindhuja SM
Jul 29, 2023
12:53 pm

செய்தி முன்னோட்டம்

உலக பல்கலைகளுக்கு இடையேயான துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்று அசத்தினார் தமிழகத்தை சேர்ந்த இளவேனில் வாலறிவன். உலக பல்கலைகழகங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டியில், மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள்ஸ் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் 252.5 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார் தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை இளவேனில் வாலறிவன். இவருக்கு அடுத்தபடியாக, அமெரிக்கா மற்றும் சீனா, வெள்ளி மற்றும் வெண்கல பதக்கத்தை வென்றது. FISU உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளை சீனாவின் செங்டுவில் நேற்று சீன அதிபர் ஜி திறந்து வைத்தார். இந்த விளையாட்டு போட்டிகளில் இந்தியாவுக்கு கிடைக்கும் முதல் தங்க பதக்கம் இதுவாகும்.

ட்விட்டர் அஞ்சல்

10 மீ. ஏர் ரைபிள் போட்டி - தங்கம் வென்ற இளவேனில்