LOADING...
இந்தியாவுடனான தோல்வி எதிரொலி காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட்டில் புயல்! பாபர் அசாம், ஷஹீன் அப்ரிடிக்கு கல்தா?
நமீபியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள ஆட்டத்தில், பாபர் அசாம் மற்றும் ஷஹீன் அப்ரிடிக்கு ஓய்வு?

இந்தியாவுடனான தோல்வி எதிரொலி காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட்டில் புயல்! பாபர் அசாம், ஷஹீன் அப்ரிடிக்கு கல்தா?

எழுதியவர் Venkatalakshmi V
Feb 17, 2026
09:40 am

செய்தி முன்னோட்டம்

2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்வியை தொடர்ந்து, அணியின் மூத்த வீரர்களான பாபர் அசாம் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடி ஆகியோரை அடுத்த போட்டியில் நீக்க அணி நிர்வாகம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அன்றைய போட்டியில் பாபர் அசாம் வெறும் 5 ரன்களில் அக்ஷர் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். மறுபுறம், ஷஹீன் அப்ரிடி, 2 ஓவர்கள் மட்டுமே வீசி, 31 ரன்களை வாரி வழங்கினார். இது இந்தியா 175 ரன்களை கடக்க முக்கிய காரணமாக அமைந்தது.

அதிரடி

PCB நிர்வாகத்தின் அதிரடி முடிவு

பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசன் தலைமையிலான நிர்வாகம், மூத்த வீரர்களின் செயல்பாட்டில் அதிருப்தி அடைந்துள்ளது. இதனால், வரும் புதன்கிழமை நமீபியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள வாழ்வா-சாவா ஆட்டத்தில், பாபர் அசாம் மற்றும் ஷஹீன் அப்ரிடிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, பெஞ்ச் பலத்தை சோதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக ஃபகார் ஜமான் மற்றும் நசீம் ஷா அல்லது சல்மான் மிர்சா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. முன்னதாக தோல்வி குறித்து பேசிய பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா,"எங்கள் சுழற்பந்து வீச்சாளர்களை நாங்கள் நம்பினோம், ஆனால் இன்று அவர்களுக்கு சாதகமான நாளாக அமையவில்லை. பவர்பிளேயில் 3 அல்லது 4 விக்கெட்டுகளை இழந்தால், டி20 போட்டிகளில் மீண்டு வருவது கடினம்" என்று தெரிவித்தார்.

Advertisement