LOADING...
டி20 உலகக்கோப்பை 2026: வங்கதேசம் விலகினால் அந்த இடத்தைப் பிடிக்கப்போகும் அணி இதுதானா?
டி20 உலகக்கோப்பை 2026 இல் வங்கதேசம் விலகினால் ஸ்காட்லாந்து அணிக்கு வாய்ப்பு கிடைக்கும் என தகவல்

டி20 உலகக்கோப்பை 2026: வங்கதேசம் விலகினால் அந்த இடத்தைப் பிடிக்கப்போகும் அணி இதுதானா?

எழுதியவர் Sekar Chinnappan
Jan 19, 2026
02:45 pm

செய்தி முன்னோட்டம்

2026 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட இந்தியா வரமாட்டோம் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் பிடிவாதம் காட்டி வருகிறது. பாதுகாப்பு காரணங்களைக் கூறி தங்களது போட்டிகளை இலங்கைக்கு மாற்றக் கோரிய வங்கதேசத்தின் கோரிக்கையை ஐசிசி திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. வரும் ஜனவரி 21 ஆம் தேதிக்குள் வங்கதேசம் தனது இறுதி முடிவை அறிவிக்க வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை வங்கதேசம் இந்தியா வர மறுத்து, தொடரிலிருந்து விலகினால் அல்லது நீக்கப்பட்டால் அந்த இடத்திற்கு எந்த அணி வரும் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

ஸ்காட்லாந்து

ஸ்காட்லாந்து அணிக்கு வாய்ப்பு?

இது தொடர்பாக வெளியான தகவல்களின்படி, வங்கதேச கிரிக்கெட் அணி உலகக்கோப்பையிலிருந்து வெளியேறினால், ஐசிசி டி20 தரவரிசையின் அடிப்படையில் ஸ்காட்லாந்து அணி அந்த இடத்தைப் பிடிக்க அதிக வாய்ப்புள்ளது. வேறு சில அணிகளும் கவனத்தில் கொள்ளப்பட்டாலும், தகுதிச் சுற்றுத் தரவரிசையில் அடுத்த நிலையில் இருக்கும் அணியே வங்கதேசத்திற்குப் பதிலாகத் தொடரில் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வங்கதேசம் இல்லாத குறையை ஸ்காட்லாந்து அணி தீர்த்து வைக்கும். மேலும், 2009 டி20 உலகக்கோப்பையில் ஜிம்பாப்வே அணி அரசியல் காரணங்களுக்காக தொடரில் இருந்து விலகியபோதும், ஸ்காட்லாந்து அணி மாற்றும் அணியாக தொடரில் பங்கேற்றதும் குறிப்பிடத்தக்கது.

குரூப் மாற்றம்

குரூப் மாற்றக் கோரிக்கையும் நிராகரிப்பு

வங்கதேச அணி தனது போட்டிகளை இலங்கையில் விளையாடும் வகையில், அயர்லாந்து அணி இருக்கும் குரூப் பி பிரிவிற்குத் தங்களை மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தது. ஆனால், இந்த கோரிக்கையையும் ஐசிசி ஏற்கவில்லை. ஏற்கனவே திட்டமிட்டபடி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பிப்ரவரி 7 ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக வங்கதேசம் தனது முதல் போட்டியில் விளையாட வேண்டும். இதில் மாற்றம் செய்ய ஐசிசி தயாராக இல்லை.

Advertisement

அரசியல்

விபரீதமாகும் அரசியல் சூழல்

இந்த விவகாரம் வெறும் கிரிக்கெட்டாகத் தொடங்கினாலும், தற்போது இரு நாடுகளுக்கு இடையிலான அரசியல் சிக்கலாக மாறியுள்ளது. வங்கதேசத்தில் நிலவும் குழப்பமான சூழல் மற்றும் இந்தியாவிற்கு எதிரான அவர்களது நிலைப்பாடு காரணமாக இந்த மோதல் முற்றியுள்ளது. வங்கதேச முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்கள், ஐசிசியின் முடிவுக்குக் கட்டுப்பட்டு இந்தியா வரவில்லை என்றால், அது அந்த நாட்டு கிரிக்கெட்டிற்குப் பெரிய பின்னடைவாக அமையும் என்று எச்சரித்து வருகின்றனர்.

Advertisement