17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக் கோப்பையை வென்றது இந்தியா
பார்படாஸின் கென்சிங்டன் ஓவலில் இன்று நடைபெற்ற டி20 உலகக் கோப்பை 2024 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி பட்டத்தை வென்றது. இந்த வரலாற்று வெற்றிக்குப் பிறகு, விராட் கோலி தான் டி20யில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்தார். 11 ஆண்டுகளுக்கு பிறகு ஐசிசி பட்டத்தை இந்தியா வென்றுள்ளது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையும், 17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக் கோப்பையும் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. இந்தியாவின் வெற்றிக்குப் பிறகு ரோஹித் சர்மாவும் முகமது சிராஜும் உணர்ச்சிவசப்பட்டு கண்கள் கலங்கினர்.
டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவிப்பு
ரோஹித்தும் விராட்டும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து தங்களது வெற்றியை கொண்டாடினர். இதற்கிடையில், ஹர்திக் பாண்டியாவும் கண்கள் கலங்கினார். இன்றைய போட்டியில், கடைசி ஓவரில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. விராட் கோலியின் 76 ரன்களும், அக்சர் பட்டேலின் 47 ரன்களும் இந்தியாவின் வெற்றியின் சிறப்பம்சங்கள் ஆகும். கடைசி ஓவரில் 16 ரன்களை வெற்றிகரமாக காத்த ஹர்திக் பாண்டியா இந்தியாவின் ஹீரோவாக மாறியுள்ளார். இறுதிப் போட்டிக்குப் பிறகு டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்தார். இன்றைய உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்ற அவர், T20I கிரிக்கெட்டில் இருந்து வெளியேறினார்.