NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவ் ஃபின் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு
    அடுத்த செய்திக் கட்டுரை
    இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவ் ஃபின் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு
    இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவ் ஃபின் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு

    இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவ் ஃபின் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 14, 2023
    04:57 pm

    செய்தி முன்னோட்டம்

    இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர் ஸ்டீவ் ஃபின் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

    வலது கை வேகப்பந்து வீச்சாளரான ஸ்டீவ் ஃபின் 2010-2017க்கு இடையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக விளையாடியுள்ளார்.

    ஃபின் இங்கிலாந்து அணிக்காக விளையாடிய காலத்தில், அந்த அணி மூன்று முறை ஆஷஸ் பட்டங்களை வென்றுள்ளது மற்றும் அவர் இங்கிலாந்தின் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் ஒரு முக்கிய வீரராக இருந்தார்.

    34 வயதான அவர் கடந்த ஆண்டு சசெக்ஸ் அணியில் விளையாட ஒப்பந்தம் செய்தார். ஆனால் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் தொடரிலிருந்து விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது.

    அப்போதிருந்து உடற்தகுதியை மேம்படுத்த கடுமையாக போராடிய ஸ்டீவ் ஃபின், தற்போது கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

    Steve Finn numbers in cricket

    கிரிக்கெட்டில் ஸ்டீவ் ஃபின்னின் புள்ளி விபரங்கள்

    2010ஆம் ஆண்டு வங்கதேசத்தின் சட்டோகிராமில் நடந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இங்கிலாந்து அணிக்காக ஸ்டீவ் ஃபின் சர்வதேச அரங்கில் அறிமுகமானார்.

    அவர் இங்கிலாந்துக்காக 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 30.40 சராசரியில் 125 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் 5 முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    2017இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் விளையாடியது அவரது கடைசி சர்வதேச போட்டியில் விளையாடினார்.

    ஃபின் இங்கிலாந்து அணிக்காக 69 ஒருநாள் மற்றும் 21 டி20 போட்டிகளில் முறையே 102 மற்றும் 27 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    மேலும் முதல்தர கிரிக்கெட்டில் 570, லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 201 மற்றும் டி20 கிரிக்கெட்டில் 176 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இங்கிலாந்து கிரிக்கெட் அணி
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்

    சமீபத்திய

    தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த நடிகர் ரவி மோகன்; ஜெயம் ஸ்டுடியோஸ் எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் ரவி
    ஓரினச் சேர்க்கையாளர்களை குடும்பமாக அங்கீகரித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு சென்னை உயர் நீதிமன்றம்
    அரிய பூமி காந்தத் தடையால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தவிப்பு; சீனாவுடன் பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு முயற்சி ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    இந்தியாவில் ஐபோன் மற்றும் மேக்புக் பழுதுபார்ப்புகளுக்காக டாடாவுடன் கைகோர்த்தது ஆப்பிள் ஆப்பிள் நிறுவனம்

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி

    ரயில் நிலையத்தில் பை திருட்டு : ட்விட்டரில் கோபமாக பதிவிட்ட இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கிரிக்கெட்
    சர்ச்சையில் சிக்கிய முன்னாள் இங்கிலாந்து வீரர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு கிரிக்கெட்
    ஐபிஎல் 2023 : நாடு திரும்புகிறாரா மார்க் வுட்? சிக்கலில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
    சிஎஸ்கே அணியில் இடமில்லை! பிளேஆப் சுற்றுக்கு முன்பாகவே நாடு திரும்புகிறார் பென் ஸ்டோக்ஸ்! ஐபிஎல்

    கிரிக்கெட்

    INDvsWI டி20: இரண்டாவது போட்டியிலும் தோல்வி; வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக மோசமான சாதனை படைத்த இந்தியா டி20 கிரிக்கெட்
    INDvsWI 2வது டி20 : சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் சாதனையை முறியடித்த திலக் வர்மா டி20 கிரிக்கெட்
    காஷ்மீர் பெண்ணை திருமணம் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் வீரர் சர்ஃபராஸ் கான் டெல்லி கேப்பிடல்ஸ்
    ஒருநாள் உலகக்கோப்பை 2023 : கிரிக்கெட் அணியை இந்தியா அனுப்ப பாகிஸ்தான் அரசு ஒப்புதல் கிரிக்கெட் செய்திகள்

    கிரிக்கெட் செய்திகள்

    தேசிய நண்பர்கள் தினம் : கிரிக்கெட் உலகின் டாப் 3 சிறந்த நண்பர்கள் நண்பர்கள் தினம்
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தேர்வுக்குழு தலைவராக இன்சமாம்-உல்-ஹக் நியமனம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
    மேலும் ஒரு பாகிஸ்தான் போட்டிக்கு சிக்கல்; ஒருநாள் உலகக்கோப்பை போட்டி அட்டவணையில் கூடுதல் தாமதம்  பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
    IND vs WI 2வது டி20 : டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு இந்திய கிரிக்கெட் அணி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025