இந்திய ஹாக்கி வரலாற்றில் முதல்முறை : மைதானத்திற்கு வீராங்கனை ராணி ராம்பால் பெயர்
இந்திய மகளிர் ஹாக்கி அணியின் நட்சத்திர வீராங்கனையான ராணி ராம்பால் பெயர் ரேபரேலியில் உள்ள எம்சிஎப் ஹாக்கி மைதானத்திற்கு சூட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் ஹாக்கி மைதானத்திற்கு பெயர் சூட்டப்படும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை ராணி ராம்பால் பெற்றுள்ளார். ராணி இதற்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மைதானத்தை திறந்து வைத்தார். மேலும் இது தொடர்பான படங்களையும் தனது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஹாக்கியில் நான் ஆற்றிய பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் எம்சிஎப் ரேபரேலி ஹாக்கி ஸ்டேடியத்தை "ராணி'ஸ் கேர்ள்ஸ் ஹாக்கி டர்ஃப் என்று பெயர் மாற்றம் செய்திருப்பதற்கு மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.