
ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது பெரிய சேசிங் வெற்றி; சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சாதனை
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2025 இல் சனிக்கிழமை (ஏப்ரல் 12) ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் 246 ரன்கள் என்ற இலக்கை வெற்றிகரமாக சேஸ் செய்து, பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) அணி குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது.
இந்த சீசனில் அவர்களின் இரண்டாவது வெற்றியான இந்த வெற்றிக்கு, அபிஷேக் சர்மாவின் அபார சதமும், டிராவிஸ் ஹெட்டின் அரைசதமும் முக்கிய காரணமாக அமைந்தன.
முன்னதாக, டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரின் 82 ரன்கள், பிரியான்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோரின் வலுவான ஆட்டத்தால் 245 ரன்கள் குவித்தது.
எஸ்ஆர்எச்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
பந்துவீச்சில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஹர்ஷல் படேல் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும் இஷான் மலிங்கா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த எஸ்ஆர்எச் அணியின் அபிஷேக் ஷர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
அபிஷேக் ஷர்மா வெறும் 55 பந்துகளில் 141 ரன்கள் எடுத்தார். டிராவிஸ் ஹெட் 37 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார். மேலும், இந்த ஜோடி கூட்டாக 171 ரன்கள் குவித்தது.
இதன் மூலம் 18.3 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்த சேஸிங் இப்போது ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச சேசிங் வெற்றியாக உள்ளது.
முன்னதாக, ஐபிஎல் 2024 இல் பஞ்சாப் கிங்ஸ் 263 ரன்கள் சேர்த்தது முதலிடத்தில் உள்ளது.