NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்
    இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்

    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 04, 2024
    08:07 am

    செய்தி முன்னோட்டம்

    பெங்களூருவில் நடந்து வரும், 2-வது மகளிர் ஐபிஎல் போட்டி தொடரில் 5 அணிகள் பங்கேற்றுள்ளன.

    இந்த தொடரில் இன்று நடைபெறவுள்ள லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் உ.பி.வாரியர்ஸ் அணியும் மோதவிருக்கின்றன.

    இதுவரை நடைபெற்ற போட்டிகளில், பெங்களூரு அணியும், உ.பி.வாரியர்ஸ் அணியும் தலா 2 வெற்றிகளையும், 2 தோல்விகளையும் பெற்றுள்ளது.

    இதில் பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் 4ஆம் இடத்திலும், உ.பி அணி 3ஆம் இடத்திலும் உள்ளது.

    அதனால் இன்று நடைபெறவுள்ள போட்டி, இரு அணிகளின் புள்ளி பட்டியலில் மாற்றத்தை தீர்மானிக்கும்.

    இதனால், வெற்றி பெறும் நோக்கில் இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றன.

    இப்போட்டி, இன்று இரவு 7 :30 மணிக்கு தொடங்கவுள்ளது.

    செஸ்

    பிராக் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி

    செக்குடியரசின் பிராக் நகரில் நடைபெற்றுவரும் பிராக் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் நேற்றைய போட்டியில், இந்திய வீரர்கள் ஆர்.பிரக்ஞானந்தா மற்றும் டி.குகேஷ் இருவரும், தத்தமது போட்டிகளை ட்ரைவில் முடிவு செய்தனர்.

    பிரக்ஞானந்தா, செக்குடியரசின் நுயென் தான் டாயுடன் மோதினார், இப்போட்டி 40 வது நகர்வில் ட்ரைவில் முடிவடைய, குகேஷ் போட்டியிட உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசட்டரோவுக்கு எதிரான போட்டி, 39 வது நகர்வில் ட்ரைவில் முடிவடைந்தது.

    மற்றொரு இந்திய வீரரான விதித் குஜராத்தியும், போலந்தின் மாட்யூஸ் பார்டெலுக்கு எதிரான போட்டியை ட்ரைவில் முடிவு செய்தார்.

    டெஸ்ட் தரவரிசை

    ஐசிசி தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறிய இந்திய அணி

    நேற்று வெளியான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில், இந்திய அணி, முதலிடத்தை பெற்றுள்ளது.

    நியூஸிலாந்தில், ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் போட்டிகளை விளையாடி வருகிறது.

    இத்தொடரில், நேற்று நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணியை 172 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வென்றது.

    இதனால், ஐசிசி உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த நியூஸிலாந்து, 60 புள்ளிகள் பெற்று 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

    இதன்மூலம், இரண்டாம் இடத்தில் இருந்த இந்திய அணி, 64.58 புள்ளிகளுடன் தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

    அதோடு, இந்த தரவரிசையில், ஆஸ்திரேலிய அணி 59.09 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.

    வாலி பால்

    வாலி பால் லீக்: கொல்கத்தா அணி தோல்வி 

    சென்னையில் நடைபெற்று வரும், 9 அணிகள் பங்குபெறும் 3-வது பிரைம் வாலிபால் லீக் போட்டியில் நேற்று 25-வது லீக் ஆட்டம் நடைபெற்றது.

    இதில், கொல்கத்தா தண்டர்போல்ட்ஸ் அணியும், டெல்லி டூபான்ஸ் அணியும் மோதிக்கொண்டன.

    ஆட்டத்தின் தொடக்கம் முதலே அபாரமாக விளையாடிய டெல்லி அணி, 15-9, 16-14, 17-15 என்ற கணக்கில் கொல்கத்தா அணியை தோற்கடித்தது.

    இது டெல்லி அணிக்கு இது 4-வது வெற்றியாகும்.

    அதேபோல, கொல்கத்தாவுக்கு 5-வது தோல்வியாகும்.

    இதனை தொடர்ந்து இன்று, ஐதராபாத் பிளாக் ஹாக்ஸ்- பெங்களூரு டார்படோஸ் அணிகளும், சென்னை பிளிட்ஸ்- மும்பை மீட்டியார்ஸ் அணிகளும் விளையாடவுள்ளன

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விளையாட்டு
    விளையாட்டு வீரர்கள்
    மகளிர் ஐபிஎல்
    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    விளையாட்டு

    கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு 2024: சின்னம் வெளியிடப்பட்டது கேலோ இந்தியா
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் விளையாட்டு வீரர்கள்
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்  விளையாட்டு வீரர்கள்
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் விளையாட்டு வீரர்கள்

    விளையாட்டு வீரர்கள்

    ரஷ்யா மற்றும் பெலாரஸ் வீரர்கள் நடுநிலை போட்டியாளர்களாக ஒலிம்பிக்கில் பங்கேற்க அனுமதி ஒலிம்பிக்
    மகேந்திர சிங் தோனி பயன்படுத்திய எண்.7-க்கு விடை கொடுத்த பிசிசிஐ கிரிக்கெட்
    Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள் இங்கிலாந்து கிரிக்கெட் அணி
    Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள் மல்யுத்தம்

    மகளிர் ஐபிஎல்

    மகளிர் ஐபிஎல் 2023 : நட்சத்திர வீராங்கனைகளுடன் களமிறங்கும் டெல்லி கேப்பிடல்ஸ்! பெண்கள் கிரிக்கெட்
    ராயல் சேலஞ்சர்ஸ் மகளிர் அணியின் வழிகாட்டியாக சானியா மிர்ஸா நியமனம் சானியா மிர்சா
    மார்ச் 4 முதல் 26 ஆம் தேதி வரை! மகளிர் ஐபிஎல்லின் முழு போட்டி அட்டவணை வெளியானது! பெண்கள் கிரிக்கெட்
    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மகளிர் அணியின் தலைமை பயிற்சியாளராக பென் சாயர் நியமனம்! பெண்கள் கிரிக்கெட்

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

    இதே நாளில் அன்று : டி20 கிரிக்கெட்டில் 10,000 ரன்களை கடந்து கிறிஸ் கெயில் சாதனை டி20 கிரிக்கெட்
    ஐபிஎல் 2023 : விராட் கோலிக்கு 10% அபராதம் விதிப்பு ஐபிஎல்
    ஆர்சிபிக்கு எதிராக ஷிகர் தவான் ஆடுவது சந்தேகம் : சிக்கலில் பஞ்சாப் கிங்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ்
    ஐபிஎல் 2023 : மீண்டும் ஆர்சிபியின் கேப்டன் பொறுப்பை ஏற்ற விராட் கோலி ஐபிஎல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025