NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய சுவாரசிய விளையாட்டு செய்திகள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய சுவாரசிய விளையாட்டு செய்திகள் 
    இன்றைய சுவாரசிய விளையாட்டு செய்திகள்

    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய சுவாரசிய விளையாட்டு செய்திகள் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 09, 2024
    08:17 am

    செய்தி முன்னோட்டம்

    பாரீஸ் ஒலிம்பிக் பதக்கத்தில் ஈஃபிள் டவரின் உலோகம் பயன்படுத்தப்பட்டிருப்பதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் சுவாரஸ்ய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளனர்.

    விளையாட்டு உலகில் மிகவும் பிரபலமான ஒலிம்பிக் விளையாட்டு தொடர் இந்த ஆண்டு, ஜூலை மாதம் பிரான்ஸ் நாட்டில் தொடங்கவுள்ளது.

    இந்த தொடரில் பங்கேற்க இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் இருந்து வீரர்- வீராங்கனைகள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த தொடரில் பங்கேற்க தகுதி போட்டிகளும் தற்போது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    இந்த சூழலில் தான் பதக்கம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. முந்தைய டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் போது, பயன்படுத்தப்பட்ட பழைய மொபைல் போன்களை கொண்டு பதக்கங்களை உருவாக்கியது.

    அந்த வரிசையில் தற்போது பிரான்ஸ், தனது பிரபல சின்னமான ஈஃபிள் டவரின் உலோகத்தை பயன்படுத்தியுள்ளது

    கிரிக்கெட்

    ஜூனியர் உலகக்கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்திய ஆஸ்திரேலியா

    ஜூனியர் கிரிக்கெட் (19 வயதிற்கு உட்பட்டவருக்கான) உலகக்கோப்பை போட்டி தொடரின் அரையிறுதியின் இரண்டாவது சுற்றில், நேற்று பாகிஸ்தான் அணியும், ஆஸ்திரேலியா அணியும் மோதிக்கொண்டன.

    இந்த போட்டியில், பாகிஸ்தானை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வென்றது.

    இதனை அடுத்து, இறுதி போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியா அணியை ஆஸ்திரேலியா அணி எதிர்கொள்ளும்.

    இந்த போட்டி வரும் பிப்ரவரி 11 ஆம் தேதி நடைபெறும்.

    தென் ஆப்பிரிக்கவில் நடைபெற்று வரும் இந்த தொடரில் 16 அணிகள் பங்கேற்றன.

    41 ஆட்டங்கள் அடங்கிய இந்த போட்டி தொடரின் இறுதியில், உலக கோப்பையை வெல்ல போவது யார்?

    ரஞ்சி

    ரஞ்சி கிரிக்கெட்: தமிழ்நாடு - கர்நாடகா அணிகள் போட்டியை இலவசமாக காணலாம்

    ரஞ்சி டிராஃபி கிரிக்கெட் தொடரின் 'சி' பிரிவில் உள்ள தமிழக அணி, தனது 6-வது லீக் ஆட்டத்தில் கர்நாடகாவுடன் மோதுகிறது.

    இன்று இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் காலை 9:30 மணியளவில் தொடங்கும்.

    முன்னதாக இந்த போட்டியை இலவசமாக காணலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

    சி, டி, இ, ஆகிய ஸ்டாண்டுகளின் கீழ்தளத்தில் அமர்ந்து போட்டியை பார்க்கலாம் என்றும், விக்டோரியா ஹாஸ்டல் ரோட்டில் உள்ள 4-வது நுழைவு வாயில் வழியாக ரசிகர்கள் ஸ்டேடியத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஐபில்

    CSK அணிக்கான புதிய ஜெர்சி வெளியிடப்பட்டது

    ஐபிஎல் போட்டி விரைவில் தொடங்கவுள்ளது. இது நாள் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் ஸ்பான்சர் செய்து வந்தது.

    இந்த நிலையில், சென்னை அணியின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக ஐக்கிய அரபு அமீரகத்தின் விமான நிறுவனமான எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனம் இணைந்துள்ளது.

    அதனை தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ புதிய ஜெர்சி நேற்று வெளியிடப்பட்டது.

    இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூர் சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், கொல்கட்டா நைட் ரைடர்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கும்.

    தேர்தல் முடிவடைந்த பின்னர் இந்த போட்டி தொடர் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விளையாட்டு
    விளையாட்டு வீரர்கள்
    ஒலிம்பிக்
    உலக கோப்பை

    சமீபத்திய

    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா

    விளையாட்டு

    கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு 2024: சின்னம் வெளியிடப்பட்டது கேலோ இந்தியா
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் பேட்மிண்டன் செய்திகள்
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்  விளையாட்டு வீரர்கள்
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் கிரிக்கெட் செய்திகள்

    விளையாட்டு வீரர்கள்

    சுதந்திர தின ஸ்பெஷல் : 76 ஆண்டுகால வரலாற்றில் விளையாட்டுத் துறையில் இந்தியாவின் முக்கிய சாதனைகள் இந்தியா
    மாற்றுத் திறனாளிகள் பாராலிம்பிக்கில் பதக்கம் வெல்ல பயிற்சி : பிரதமர் மோடி மாற்றுத்திறனாளி
    'இந்தோனேஷியா மாஸ்டர்ஸ்' பாட்மின்டன் பட்டத்தை வென்றார் இந்தியாவை சேர்ந்த கிரண் ஜார்ஜ் இந்தியா
    Sports Round Up : பேட்மிண்டனில் இந்திய ஜோடி வெற்றி; இந்திய கால்பந்து அணி அறிவிப்பு; டாப் விளையாட்டு செய்திகள் பேட்மிண்டன் செய்திகள்

    ஒலிம்பிக்

    பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு இந்திய ரேஸ்வாக்கிங் வீரர்கள் தகுதி விளையாட்டு
    பாரிஸ் ஒலிம்பிக் கூடைப்பந்தாட்ட தகுதிப் போட்டிகளில் விளையாட ரஷ்யாவுக்கு தடை உலக கோப்பை
    தமிழக விளையாட்டு வீரர்களுக்கு வெளிநாட்டில் பயிற்சி! மத்திய விளையாட்டு அமைச்சகம் ஒப்புதல்! மத்திய அரசு
    'ஐபிஎல்லில் விளையாடுவேன்' : ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா ஜாலி பேட்டி கிரிக்கெட்

    உலக கோப்பை

    சச்சின் டெண்டுல்கரின் மற்றொரு சாதனையை முறியடித்த விராட் கோலி! கிரிக்கெட்
    கிரிக்கெட் ரசிகர்கள் இடையே சர்ச்சையை கிளப்பிய 'மேக் மை ட்ரிப்' விளம்பரம் இந்தியா
    2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் இந்தியா உறுதியாக உள்ளது- பிரதமர் மோடி இந்தியா
    "இங்கிலாந்து தோற்றதற்கு காரணம் இதுதான்": சச்சின் டெண்டுல்கர் கருத்து கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025