NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்
    இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்

    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 19, 2024
    08:15 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

    இதன்மூலம், இந்திய அணி, இந்தத் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

    5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து வென்ற நிலையில், 2-வது போட்டியில் இந்தியா வெற்றி அடைந்தது.

    இதையடுத்து தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்த நிலையில் தற்போது இந்தியா வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது.

    பேட்மிண்டன்

    இந்திய மகளிர் அணி தங்க பதக்கத்தை வென்றது

    மலேசியாவின் சிலாங்கூரின் ஷா ஆலம் பகுதியில் நடைபெற்ற ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி தொடரின் இறுதி போட்டியில், தாய்லாந்தை வீழ்த்தி இந்திய மகளிர் அணி தங்க பதக்கத்தை வென்றுள்ளது.

    இந்த தொடரில், இந்தியா, தாய்லாந்து, ஜப்பான், இந்தோனேசியா, தென் கொரியா, சீனா, மலேசியா ஆகிய 7 ஆசிய அணிகள் கலந்துகொண்டன.

    இந்த தொடரில் நேற்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் இந்தியா, தாய்லாந்து அணிகள் மோதின.

    இதில், 3-2 என்ற கணக்கில் இந்தியா அணி வெற்றி பெற்றது.

    இந்த மகளிர் அணியை வழிநடத்தி சென்றவர் பி.வி.சிந்து ஆவார்.

    டேபிள் டென்னிஸ்

    உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் குழு: இந்திய பெண்கள் அணி வெற்றி

    தென் கொரியாவில் நடைபெற்று வரும், உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் குழு போட்டியில், இந்திய பெண்கள் அணி ஹங்கேரி அணியை எதிர்த்து வெற்றி பெற்றது.

    இந்தியாவின் டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா முதல் போட்டியில் டோரா மதராஸை 3-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.

    இதனால், ஹங்கேரி அணிக்கு எதிராக இந்திய பெண்கள் அணி 3-2 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

    அடுத்ததாக, உஸ்பெகிஸ்தான் அணியை எதிர்த்து இந்திய அணி நாளை விளையாட உள்ளது.

    கபடி 

    புரோ கபடி லீக்: குஜராத் ஜெயன்ட்ஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் இன்று மோதல்

    10-வது புரோ கபடி லீக் தொடரில் இன்று குஜராத் ஜெயன்ட்ஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வரும் இந்த தொடரில், பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன.

    இந்த நிலையில் ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள நடைபெறும் இன்றைய போட்டி, இரவு 8 மணிக்கு துவங்கும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விளையாட்டு
    விளையாட்டு வீரர்கள்
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    விளையாட்டு

    கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு 2024: சின்னம் வெளியிடப்பட்டது கேலோ இந்தியா
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் விளையாட்டு வீரர்கள்
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்  பேட்மிண்டன் செய்திகள்
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் விளையாட்டு வீரர்கள்

    விளையாட்டு வீரர்கள்

    ஆசிய விளையாட்டில் சீன அதிகாரிகளின் தில்லுமுல்லு; அஞ்சு பாபி ஜார்ஜ் கோபம் ஆசிய விளையாட்டுப் போட்டி
    சென்னையில் அதிநவீன விளையாட்டு நகரம் அமைக்க டெண்டர் அறிவிப்பு வெளியிட்டது தமிழக அரசு தமிழக அரசு
    பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு மிகப்பெரிய வீரர்கள் குழுவை அனுப்பியது இந்தியா ஆசிய விளையாட்டுப் போட்டி
    பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஒரே நாளில் நான்கு தங்கம் வென்ற இந்தியா ஆசிய விளையாட்டுப் போட்டி

    கிரிக்கெட்

    ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான் 3வது டெஸ்ட் : விளையாடும் லெவனில் மாற்றம் செய்யாத ஆஸ்திரேலியா ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்டில் புதுமுக வீரர்களுடன் களமிறங்குகிறது பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட்
    இந்தியா vs தென்னாப்பிரிக்கா இரண்டாவது டெஸ்ட் : முன்னோட்டம் மற்றும் புள்ளிவிபரம் இந்தியா vs தென்னாப்பிரிக்கா
    இந்தியா vs ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் : ஸ்னே ராணாவுக்கு பதிலாக மன்னத் காஷ்யப் அறிமுகம் மகளிர் கிரிக்கெட்

    கிரிக்கெட் செய்திகள்

    அணித் தேர்வில் ரவி சாஸ்திரி-விராட் கோலி தான் பெஸ்ட்; முன்னாள் வீரர் கருத்து இந்தியா vs தென்னாப்பிரிக்கா
    வங்கதேசத்திற்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி டி20 கிரிக்கெட்
    தேர்வுக்குழு தலைவராக இருந்துகொண்டு இப்படி செய்யலாமா? பாகிஸ்தானில் புது சர்ச்சை கிரிக்கெட்
    நடுவர்கள் ஸ்டேடியத்தில் இருந்து வெளியேற்றம்; அமெரிக்கன் பிரீமியர் லீக்கில் அதிர்ச்சி சம்பவம் டி20 கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025