NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஸ்போர்ட்ஸ் ரவுண்டுஅப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டுஅப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் 
    இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்

    ஸ்போர்ட்ஸ் ரவுண்டுஅப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 12, 2024
    08:27 am

    செய்தி முன்னோட்டம்

    நேற்று நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில், இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது ஆஸ்திரேலியா அணி.

    14 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை கைப்பற்றி சாதனை புரிந்துள்ளது அந்த அணி.

    ஆஸ்திரேலியா கடைசியாக கடந்த 2010-ஆம் ஆண்டு U 19 உலகக் கோப்பை தொடரில் பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    தென்னாபிரிக்காவில் நடைபெற்ற இந்த போட்டி தொடரில் 16 அணிகள் பங்கேற்று விளையாடின.

    டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலியா, 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்தது. எனினும், இந்தியா அணி, 43.5 ஓவர்களில் 174 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    டென்னிஸ்

    சென்னை டென்னிஸ் போட்டியில், சாம்பியன் பட்டம் வென்றார் சுமித் நாகல்

    சென்னையில் நடைபெற்ற சென்னை ஓபன் சேலஞ்சர் சர்வதேச டென்னிஸ் போட்டியில், சாம்பியன் பட்டத்தை வென்றார் இந்திய வீரர் சுமித் நாகல்.

    நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில், சுமித் நாகல், இத்தாலிய வீரர் லுகா நார்டியை எதிர்கொண்டார்.

    அவரை 6-1, 6-4 என்ற நேர் செட்டில் தோற்கடித்து சாம்பியன் கோப்பையை வென்றார் சுமித்.

    இந்த வெற்றி மூலம், டென்னிஸ் தரவரிசை பட்டியலில் சுமித் நாகல் முதல் முறையாக டாப்-100 இடத்திற்குள் நுழைகிறார்.

    அவர் 98-வது இடத்தை பிடிக்கிறார்.

    கிரிக்கெட்

    SA vs AUS டி20

    மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெறும் சர்வதேச டி20 கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

    மேற்கு இந்தியத் தீவுகள் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20 தொடரில் விளையாடி வருகிறது.

    இந்நிலையில் முதலாவது டி20 போட்டி ஹோபர்ட்டில் நடைபெற்றது. அந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதைத் தொடர்ந்து நேற்று அடிலெய்ட் நகரில் 2-வது டி20 போட்டி நடைபெற்றது.

    அதிலும் ஆஸ்திரேலியாவே வெற்றி பெற்றது. இதன்மூலம் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றியுள்ளது

    கிரிக்கெட் 

    ரஞ்சி போட்டி: தமிழக அணிக்கு 319 ரன்கள் இலக்கு 

    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 'சி' பிரிவுக்கான ஆட்டம், தமிழகம் - கர்நாடகா அணிகளுக்கு இடை கிரிக்கெட் தொடரின் 'சி' பிரிவுக்கான ஆட்டம், தமிழகம் - கர்நாடகா அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது.

    சென்னையில் நடைபெறும் இந்த ஆட்டத்தில், முதலில் டாஸ் வென்று பேட் செய்த கர்நாடகா அணி முதல் இன்னிங்ஸில், 366 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

    இதனை அடுத்து விளையாடிய தமிழ்நாடு அணி, 151 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

    அடுத்ததாக இரண்டாவது இன்னிங்சில், விளையாடிய கர்நாடகா, 56.4 ஓவர்களில் 139 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் தமிழக அணிக்கு 319 ரன்கள் தேவைப்படுகின்றன.

    இன்னும் 2 நாள் ஆட்டம் மீதமுள்ள நிலையில் இன்று தமிழக அணி தனது 2-வது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடவுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விளையாட்டு
    விளையாட்டு வீரர்கள்
    உலக கோப்பை
    கிரிக்கெட்

    சமீபத்திய

    லாகூரில் நடந்த விபத்தில் LeT இணை நிறுவனர் படுகாயம்; ISI பாதுகாப்பில் மருத்துவமனையில் சிகிச்சை லஷ்கர்-இ-தொய்பா
    விவாகரத்து வழக்கில் திருப்பம்: நடிகர் ஜெயம் ரவியிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கோரிய ஆர்த்தி விவாகரத்து
    சத்தீஸ்கர்: பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 27 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர் மாவோயிஸ்ட்
    சென்னையில் போக்குவரத்து அபராதங்களுக்கு புதிய கட்டுப்பாடு: 5 விதிமீறல்களுக்கு மட்டும் அபராதம் சென்னை

    விளையாட்டு

    கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு 2024: சின்னம் வெளியிடப்பட்டது கேலோ இந்தியா
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் ஒலிம்பிக்
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்  விளையாட்டு வீரர்கள்
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் கிரிக்கெட்

    விளையாட்டு வீரர்கள்

    'இந்தோனேஷியா மாஸ்டர்ஸ்' பாட்மின்டன் பட்டத்தை வென்றார் இந்தியாவை சேர்ந்த கிரண் ஜார்ஜ் இந்தியா
    Sports Round Up : பேட்மிண்டனில் இந்திய ஜோடி வெற்றி; இந்திய கால்பந்து அணி அறிவிப்பு; டாப் விளையாட்டு செய்திகள் பேட்மிண்டன் செய்திகள்
    Sports Round Up : தங்கம் வென்ற இளவேனில்; 8வது முறையாக ஆசிய கோப்பை வென்ற இந்தியா; டாப் விளையாட்டு செய்திகள் ஆசிய கோப்பை
    ஆசிய விளையாட்டுப் போட்டி : பதக்கங்களை குவிக்க தயாராகும் 13 பேர் கொண்ட இந்திய குத்துச்சண்டை அணி ஆசிய விளையாட்டுப் போட்டி

    உலக கோப்பை

    2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் இந்தியா உறுதியாக உள்ளது- பிரதமர் மோடி இந்தியா
    "இங்கிலாந்து தோற்றதற்கு காரணம் இதுதான்": சச்சின் டெண்டுல்கர் கருத்து கிரிக்கெட்
    ஒருநாள் உலகக்கோப்பை: இலங்கை அணியின் தலைமை மாற்றம், போட்டியில் பின்னடைவை ஏற்படுத்துமா? ஒருநாள் உலகக்கோப்பை
    உலகக்கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி தொடர் - டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு  இலங்கை

    கிரிக்கெட்

    நடுவர்கள் ஸ்டேடியத்தில் இருந்து வெளியேற்றம்; அமெரிக்கன் பிரீமியர் லீக்கில் அதிர்ச்சி சம்பவம் டி20 கிரிக்கெட்
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இளம் வீரருக்கு வாய்ப்பளிக்க பாகிஸ்தான் முடிவு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி
    Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள் கால்பந்து
    சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் டேவிட் வார்னர் டேவிட் வார்னர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025