
INDvsENG: அடுத்தடுத்த சதங்களுடன் விராட் கோலி, சுனில் கவாஸ்கரின் சாதனையை சமன் செய்தார் ஷுப்மன் கில்
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் ஷுப்மன் கில், நடந்து கொண்டிருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக தொடர்ச்சியாக சதங்களை அடித்து, சாதனை படைத்துள்ளார். முன்னதாக, இந்த சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக தனது சீரற்ற ஃபார்மிற்காக விமர்சனங்களை எதிர்கொண்ட ஷுப்மன் கில், டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக சதங்களை பதிவு செய்த நான்காவது இந்திய கேப்டன் என்ற பெருமையை தற்போது பெற்றுள்ளார். முன்னதாக, விஜய் ஹசாரே, சுனில் கவாஸ்கர் மற்றும் விராட் கோலி ஆகியோர் மட்டுமே இந்த சாதனையை பதிவு செய்திருந்த நிலையில், அந்த பட்டியலில் தற்போது கில்லும் இணைந்துள்ளார்.
இங்கிலாந்து
இங்கிலாந்தில் குறைந்த சராசரி வைத்திருந்த ஷுப்மன் கில்
முன்னதாக இங்கிலாந்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெறும் 14.66 என்ற குறைந்தபட்ச சராசரியை வைத்திருந்த ஷுப்மன் கில், 2025 ஆம் ஆண்டில் அபாரமாக செயல்பட்டு வருகிறார். இங்கிலாந்தில் கேப்டனாக அவர் அடித்த இரண்டு சதங்கள் மூலம், இங்கிலாந்தில் தலா 2 சதங்களுடன் அதிக டெஸ்ட் சதங்கள் அடித்த முகமது அசாருதீன் மற்றும் விராட் கோலியின் சாதனையை சமன் செய்துள்ளார். சுவாரஸ்யமாக, இது கடந்த ஆண்டு தர்மசாலாவில் அவர் அடித்த சதம் உட்பட, கில்லின் தொடர்ச்சியான மூன்றாவது டெஸ்ட் சதமாகும். இதற்கிடையே, மற்றொரு மைல்கல் சாதனையாக, ஷுப்மன் கில் இப்போது 16 சதங்களுடன் சர்வதேச கிரிக்கெட்டில் 15 சதங்கள் நடித்துள்ள எம்எஸ் தோனியை முந்தியுள்ளார்.