ஒரே ஆண்டில் டி20, ஒருநாள், டெஸ்ட் மற்றும் ஐபிஎல்லில் சதமடித்த முதல் இந்தியர்! ஷுப்மான் கில் சாதனை!
ஐபிஎல் 2023 தொடரில் முழு ஃபார்மில் உள்ள ஷுப்மான் கில் அகமதாபாத்தில் நடந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் சதத்தை விளாசினார். மேலும் ஐபிஎல்லில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக சதம் அடித்த முதல் பேட்டர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். முன்னதாக, ஐபில்லில் முன்பும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக அதிக ஸ்கோர் அடித்தவராகவும் 96 ரன்களுடன் கில்லே இருந்தார். கில் முந்தைய அதிகபட்ச தனிநபர் ஸ்கோரை வைத்திருந்தார். அவர் ஐபிஎல் 2022 இல் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக இந்த ஸ்கோரை எடுத்திருந்தார். இதற்கிடையே, இந்த ஆட்டத்தின் போது குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக 1,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை கில் பெற்றார்.
அனைத்து வீரர்களும் பேட்டிங் செய்த ஐபிஎல் இன்னிங்சில் சதமடித்த முதல் வீரர்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான சதம் மூலம் அனைத்து வீரர்களும் பேட்டிங் செய்த ஐபிஎல் இன்னிங்ஸில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை கில் பெற்றுள்ளார். மேலும் ஒரு இன்னிங்ஸில் குறைந்தபட்சம் 4 டக் அவுட்டான நிலையில் சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். கில் மற்றும் சுதர்சன் இருவரும் கூட்டாக 147 ரன்கள் எடுத்தது ஐபிஎல்லில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாக அமைந்துள்ளது. மேலும் ஒரே ஆண்டில் டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல்லில் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையையும் கில் பெற்றுள்ளார்.