Page Loader
பாகிஸ்தானிய நடிகையை மணந்தார் சானியா மிர்சாவின் முன்னாள் கணவர் சோயப் மாலிக் 

பாகிஸ்தானிய நடிகையை மணந்தார் சானியா மிர்சாவின் முன்னாள் கணவர் சோயப் மாலிக் 

எழுதியவர் Sindhuja SM
Jan 20, 2024
01:31 pm

செய்தி முன்னோட்டம்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக், பாகிஸ்தானின் பிரபல நடிகை சனா ஜாவேத்தை திருமணம் செய்து கொண்டதாக இன்று அறிவித்தார். முன்னாள் இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவிடம் இருந்து சோயிப் மாலிக் விவாகரத்து வாங்கிவிட்டதாக வதந்திகள் பரவி வந்த நிலையில், இந்த திருமண அறிவிப்பு வெளியாகி உள்ளது. சோயிப் மாலிக்கும் சானியா மிர்சாவும் 2010ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். அதைத் தொடர்ந்து பாகிஸ்தானின் சியால்கோட்டில் வலிமா நிகழ்வு நடைபெற்றது. 2018இல் அவர்களுக்கு இஷான் என்ற மகன் பிறந்தான். அதன் பின்னர், சமீப வருடங்களில் அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக வதந்திகள் அதிகம் பரவிய போதும், அவர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி வாயைத் திறக்கவில்லை.

தகவ்ஜ்

இந்தியா-பாகிஸ்தான் ரசிகர்கள் அதிர்ச்சி 

இந்நிலையில், பிரபல நடிகை சனா ஜாவேத்துடனான தனது திருமண புகைப்படங்களை மாலிக் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். ஏற்கனவே, சானியா மிர்சாவுடனான அவரது உறவு குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், மாலிக்கின் இந்த திருமண அறிவிப்பு இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் தலைப்புச் செய்திகளாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கின்றன. தற்போது வரை, சோயிப் மாலிக் மற்றும் நடிகை சனா ஜாவேத்தின் உறவு குறித்த எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. நடிகை சனா ஜாவேத்திற்கு முன்னதாக, மாலிக், 2022இல் நடிகை ஆயிஷா ஓமருடன் டேட்டிங் செய்ததாக வதந்திகள் பரவின. மறுபுறம், நடிகை சனா ஜாவேத், இதற்கு முன்பு, 2020 முதல் 2023 வரை, நடிகர்-பாடகர் உமைர் ஜஸ்வாலுடன் திருமண உறவில் இருந்தார்.

Instagram அஞ்சல்

சோயப் மாலிக்கின் இன்ஸ்டாகிராம் பதிவு