அதிகமுறை பார்ட்னர்ஷிப்பில் 50+ ரன்கள் : விராட் கோலியின் சாதனையை சமன் செய்த ஷிகர் தவான்
பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) கேப்டன் ஷிகர் தவான் மொஹாலியில் உள்ள பிசிஏ ஸ்டேடியத்தில் பானுகா ராஜபக்சவுடன் இணைந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் சாதனையை சமன் செய்துள்ளார். பிபிகேஎஸ் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்த நிலையில், ராஜபக்சேவுடன் தவான் பார்ட்னர்ஷிப்பில் 86 ரன்கள் எடுத்தார். இது ஐபிஎல்லில் தவான் மற்றொரு வீரருடன் பார்ட்னர்ஷிப்பில் 50 ரன்களை எடுப்பது 94வது முறையாகும். மேலும் இதன் மூலம் ஏற்கனவே 94 முறை பார்ட்னர்ஷிப்பில் 50 ரன்கள் எடுத்திருந்த கோலியின் சாதனையை சமன் செய்தார்.
அதிக முறை பார்ட்னர்ஷிப்பில் 50 ரன்கள் எடுத்த வீரர்கள்
94 முறை பார்ட்னர்ஷிப்பில் 50 ரன்கள் எடுத்து விராட் கோலியின் சாதனையை தற்போது ஷிகர் தவான் சமன் செய்த நிலையில், கோலி முதலிடத்திலும், தவான் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக சுரேஷ் ரெய்னா மற்றும் டேவிட் வார்னர் தலா 82 முறை பார்ட்னர்ஷிப்பில் 50 ரன்களுக்கும் மேல் எடுத்து பட்டியலில் முறையே மூன்றாவது மற்றும் நான்காம் இடங்களில் உள்ளனர். இதற்கிடையே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி 15வது ஓவர் வரை நின்று 29 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். 137.93 ஸ்ட்ரைக் ரேட்டில் இந்த ரன்களை எடுத்துள்ளார். இதில் ஆறு பவுண்டரிகளும் அடங்கும்.