
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் இடம் பெறாததால் சோகம் : கண்ணீருடன் ஷிகா பாண்டே பேட்டி
செய்தி முன்னோட்டம்
ஒருநாள் மற்றும் டி20 தொடருக்காக வங்கதேசம் செல்லும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பட்டியலில் இடம் பெறாத சில முன்னணி வீராங்கனைகளில் ஷிகா பாண்டேவும் ஒருவர் ஆவார்.
ஷிகா பாண்டே இந்திய கிரிக்கெட் அணியில் மிகவும் அனுபவம் வாய்ந்த வீராங்கனைகளில் ஒருவர் மற்றும் மகளிர் ஐபிஎல்லின் தொடக்க சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் அதிக விக்கெட் எடுத்தவராக முடித்தார்.
எந்த ஒரு அதிகாரப்பூர்வ காரணமும் இல்லாமல், ஷிகா பாண்டே இந்திய அணியிலிருந்து வெளியேறுவது இது முதல் முறை அல்ல.
இந்த ஆண்டு தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவில் நடந்த டி20 உலகக்கோப்பைக்காக இந்திய அணிக்கு மீண்டும் திரும்பிய அவர், பிறகு திடீரென மத்திய ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினார் மற்றும் வங்கதேச தொடருக்கும் பரிசீலிக்கப்படவில்லை.
shika pande shows displeasure about selection
அதிருப்தியை வெளிப்படுத்திய ஷிகா பாண்டே
தேர்வு செய்யப்படாதது குறித்து கேட்டபோது, ஷிகா பாண்டே கண்ணில் நீர் ததும்ப, "நான் விரக்தியும் கோபமும் இல்லை என்று சொன்னால், நான் ஒரு மனிதரே அல்ல".
"நாம் செய்த வேலைக்கான முடிவுகளைப் பெறாதபோது, அது கடினமாக இருக்கும்." என உருக்கமாக பேசினார்.
மேலும், "எனக்குத் தெரியாத சில காரணங்கள் இதற்குப் பின்னால் இருப்பதாக நான் உறுதியாக நம்புகிறேன். என் கையில் இருப்பது கடின உழைப்பு. நான் கடின உழைப்பில் உறுதியான நம்பிக்கை கொண்டவள்".
"எனவே நான் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஆரோக்கியமாக இருக்கும் வரை கடினமாக உழைக்க வேண்டும்." என்று கூறினார்.
இவர் தவிர, ரேணுகா சிங் மற்றும் ரிச்சா கோஷ் ஆகிய முன்னணி வீராங்கனைகளுக்கும் அணியில் வாய்ப்பு கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.