சுழற்பந்து ஜாம்பாவன் ஷேன் வார்ன் முதலாமாண்டு நினைவு தினம்
2022 ஆம் ஆண்டு இதே நாளில், ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் தனது 52 வயதில் திடீரென இறந்தார். கிரிக்கெட் ரசிகர்களுக்கு வார்ன் பல மறக்க முடியாத பல தருணங்களை வழங்கியுள்ளார். குறிப்பாக ஜூன் 1993 இல் அவரது ஆஷஸ் அறிமுகம் என்றும் அவரை நினைவுகூரும். ஜூன் 4, 1993இல் ஆஷஸ் தொடரில் இளம் வீரராக இங்கிலாந்தில் தனது முதல் பந்தை வீசத் தயாராகிக் கொண்டிருந்தார். எதிர்முனையில் பேட்டிங் செய் இங்கிலாந்து அணியின் மைக் கேட்டிங் சுழற்பந்தை திர்கொள்வதில் வல்லவர் என பெயரெடுத்தவர். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் வார்ன் வீசிய பந்தில் அவுட்டானார். இந்த பந்துவீச்சை "நூற்றாண்டின் பந்து" என்று பலரும் வர்ணித்தனர்.
ஷேன் வார்ன் புள்ளிவிபரங்கள்
மேலே குறிப்பிட்டபடி, நூற்றாண்டின் பந்து சர்வதேச அரங்கில் ஷேன் வார்னின் வருகையை அடையாளம் காட்டியது மட்டுமல்லாமல், 1970கள் மற்றும் 80களின் புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சாளர்களால் பெரிதும் புறக்கணிக்கப்பட்ட லெக் ஸ்பின் முறை புத்துயிர் பெற்றது. டெஸ்ட் வரலாற்றில் 700 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் என்ற பெருமையை வார்ன் பெற்றுள்ளார். இறுதியில், வார்ன் 145 டெஸ்ட் போட்டிகளில் 25.41 சராசரியில் 708 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நூற்றாண்டின் பந்து வீசப்பட்ட இங்கிலாந்தில் வார்ன், 22 டெஸ்டில் ஷேன் வார்ன் 129 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.