சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனிக்கு காலில் காயமா? பரபரப்பை கிளப்பும் மேத்யூ ஹைடன்
செய்தி முன்னோட்டம்
புதன்கிழமை (ஏப்ரல் 12) சென்னையில் உள்ள எம்.ஏ சிதம்பரம் ஆர்ஆர் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) கடைசி வரை போராடி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
அஸ்வினின் சிறப்பான பந்துவீச்சால் சிஎஸ்கே டாப் ஆர்டரை இழந்து ஆபத்தான நிலையில் சிக்கித் தவித்தபோது எம்எஸ் தோனி பேட்டிங் செய்ய வந்தார்.
அவர் வெறும் 17 பந்துகளில் 32 ரன்களை அடித்து தனது அணியை கிட்டத்தட்ட வெற்றிக்கு வழிநடத்தினார்.
கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தோனி 2 சிக்ஸர்களை விளாசினார்.
இருப்பினும், கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஆர்ஆர் அணியின் சந்தீப் சர்மா யார்க்கரை வீசி சிஎஸ்கேவை 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுறச் செய்தார்.
Mathew Hyden speaks about Dhoni
தோனி குறித்த பரபரப்பு தகவலை பகிர்ந்த ஹைடன்
தோல்விக்குப் பிறகு, முன்னாள் சிஎஸ்கே வீரர் மேத்யூ ஹைடன், தோனி மைதானத்தில் ரன் எடுக்கும்போது காலை நொண்டிக் கொண்டு இருந்ததை குறிப்பிட்டு கவலை எழுப்பியுள்ளார்.
41 வயதானாலும் தோனி வழக்கமாக பிட்சில் மிக விரைவாக ஓடுவார் என்று சுட்டிக்காட்டிய ஹைடன், ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் அது இல்லை என்று கூறியுள்ளார்.
இதனால் எம்எஸ் தோனி காயத்தில் அவதிப்படுகிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்றும் அவரது உடற்தகுதி குறித்து வெளிப்படையாக கூற வேண்டும் என்று மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே தோனியின் கடைசி ஐபிஎல் சீசன் இது எனக் கூறப்படுவதால், அவர் ஓய்வெடுக்க விரும்ப மாட்டார் என்றும், அனைத்து போட்டிகளிலும் விளையாடவே விரும்புவார் என்றும் அணிக்கு நெருக்கமான வட்டாரங்களில் கூறப்படுகிறது.