பேட்மிண்டனில் முதல் ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்தியர் சாய்னா நேவால் பிறந்த தினம்
இந்தியா போன்ற கிரிக்கெட் மீது அதீத மோகம் நாட்டின் ரசிங்கர்களை வேறு ஒரு விளையாட்டு நிகழ்விற்கு மாற்றுவது கற்பனை செய்ய முடியாதது. ஆனால் அதை சாய்னா நேவால் என்ற இந்திய பேட்மிண்டன் வீராங்கனை செய்தார். அவரது பிறந்த நாள் இன்று. ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை 2012 லண்டன் ஒலிம்பிக்கில் சாய்னா நேவால் நிகழ்த்தினார். ஹரியானாவில் மார்ச் 17, 1990 இல் பிறந்த சாய்னா நேவால் எட்டு வயதாக இருக்கும்போதே பேட்மிண்டன் விளையாடாத தொடங்கினார். 2009 இல் மதிப்புமிக்க பிடபிள்யுஎப் சூப்பர் சீரிஸ் பட்டங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார்.
சாய்னா நேவாலின் மறக்க முடியாத சில போட்டிகள்
2005இல் சாய்னா ஆசிய சாட்டிலைட் பேட்மிண்டன் போட்டியில் வென்று முதல் சர்வதேச பட்டத்தை வென்றார். 2008ஆம் ஆண்டில், சாய்னா நேவால் ஒலிம்பிக் காலிறுதியில் இடம்பெற்ற முதல் இந்தியப் பெண்மணி ஆனார். ஒரு வருடம் கழித்து, சாய்னா நேவால் இந்தோனேசிய ஓபனில் வெற்றி பெற்று, பிடபிள்யுஎப் சூப்பர் சீரிஸ் பட்டத்தை வென்ற முதல் இந்திய தடகள வீராங்கனை ஆனார். சாய்னா 2010 காமன்வெல்த் போட்டியில் பெண்கள் ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கம் மற்றும் வெண்கலம் வென்றார். 2012 ஒலிம்பிக் அவரது வாழ்வில் ஒரு மறக்கமுடியாத பயணமாக அமைந்தது. அதில் வரலாற்று சிறப்புமிக்க வெண்கலப் பதக்கம் வென்றார். 2014இல் உலக பேட்மிண்டன் தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் இந்திய வீராங்கனை ஆனார்.